வாக்கு எண்ணிக்கை நடக்கும் நாளில் திடீர் மின்தடை ஏற்பட்டால் அதனைச் சமாளிக்கும் விதமாக வாக்கு எண்ணும் மையங்களில் ஜெனரேட்டர்களைப் பயன் படுத்த தேர்தல் துறை முடிவெடுத் துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24-ம் தேதியன்று நாடாளுமன்ற தேர்தலுக் கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வாக்குகள் பதிவாகியுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் கள், மாநிலத்தின் பல்வேறு tபகுதிகளில் உள்ள 42 மையங்களில் வைத்துப் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் வரும் 16-ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகளை அரசி யல் கட்சியினர் பெரிதுபடுத் தினர். இதனால் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலை தேர்தல் ஆணையத்துக்கு ஏற்பட் டது.
அதனால், இம்முறை வாக்கு எண்ணிக்கையின்போது சிறு பிரச்சினைகூட ஏற்படாத வகையில் தேர்தல் துறை கவனமாக இருந்து வருகிறது. தேர்தல் துறைக்கு இருக்கும் பல சவால்களில் ஒன்று தடையற்ற மின்சாரம்.
தேர்தலுக்குப் பிறகு மின் பிரச்சினை…
தேர்தலுக்குப் பிறகு, கடந்த சில நாட்களாக தமிழகத்தில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு வருகிறது.அவற்றை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து மையங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக ஜெனரேட்டர்களை வைக்க தேர்தல் துறை முடிவு செய்துள்ளது.
“மின்சாரத்தை தடையின்றி வழங்க மின்துறையி னர் நடவடிக்கை மேற்கொண்டா லும், கூடுதல் நடவடிக்கை யாக அனைத்து வாக்குச்சாவடிக ளிலும் ஜெனரேட்டர்களை வைத்திருக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறியுள்ளார்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரி களிடம் கேட்டபோது, “வாக்கு எண்ணும் நாளன்று தடையற்ற மின்சாரம் வழங்குவதற்காக உதவி பொறியாளர் அளவிலான அதிகாரிகள், ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்தையும் கண்காணித்து வருகிறார்கள். ஜென ரேட்டர்களை வைப்பது என்பது தேர்தல் துறையின்” என்று கூறினர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago