அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், இளைஞருக்கு விலை உயர்ந்த மருந்துகள் மூலம் சிகிச்சை: அரசு பொது மருத்துவமனையில் அளிக்கப்பட்டது

By செய்திப்பிரிவு

சென்னை அரசு பொது மருத்து வமனையில் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் இளைஞருக்கு விலை உயர்ந்த மருந்துகள் மூலமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

திருச்சியை சேர்ந்த சிறுவன் ஜீவா(15). 9 வயதில் பலதமனி அழற்சி நோயினால் பாதிக்கப் பட்ட ஜீவா சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகிறான். இந்நிலையில் டாக் டர்களின் ஆலோசனை இல்லா மல் மருந்துகள் உட்கொள்வதை நிறுத்தியதால், சிறுவனுக்கு மீண்டும் நோயின் தாக்கம் ஏற்பட்டது. இதனால் சிறுவனின் திசு மற்றும் நரம்புகள் பாதிக்கப் பட்டது. இதையடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவ மனையில் ஜீவா அனுமதிக்கப் பட்டான். மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.விமலா உத்தரவின் படி மூட்டு, தசை மற்றும் இணைப்புத் திசு நோய்களியல் துறைத் தலைவர் டாக்டர் ராஜேஸ் வரி ரூ.63 ஆயிரம் மதிப்புள்ள பயோலஜிக்கல் மருந்தை ஊசி மூலம் 3 முறை செலுத்தியதால் சிறுவன் உயிர் பிழைத்தான்.

திருநெல்வேலியை சேர்ந்த வர் சையது முகமது காசிம் (23). சிறுவயதிலேயே தண்டு வட அழற்சி நோயினால் பாதிக்கப்பட்ட இவருக்கு இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைக்கு பிறகு வலி மற்றும் முதுகு தண்டுவடத்தில் பிடிப்பு இருந்து வந்தது. இந்நிலையில் விலை உயர்ந்த பயோலஜிக்கல் மருந்தை 3 முறை செலுத்தி சையது முகமது காசிமின் பிரச்சினையை டாக்டர்கள் சரிசெய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்