திருச்சி பொதுக்கூட்டம் திருப்புமுனையை ஏற்படுத்தும்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழக காங்கிரஸ் சார்பில் திருச்சி ஜி-கார்னரில் நாளை நடைபெற வுள்ள பொதுக்கூட்டத்துக்காக மேற் கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடு களை தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நேற்று பார்வையிட்டார். அப்போது, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுவிலக்கு குறித்த திமுக தலைவர் கருணாநிதியின் அறிவிப்பை வரவேற்கிறோம். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் திருச்சியில் 23-ம் தேதி காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக் கூட்டம் நடக்கிறது. இது தமிழக அரசியலில் திருப்புமுனையை ஏற்படுத்தும்.

தமிழக முதல்வரின் உடல்நலன் குறித்து தெரிந்துகொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது. எம்ஜிஆர் மருத்துவமனையில் இருந்தபோது, அமைச்சராக இருந்த ஹண்டே அவ்வப்போது அதுதொடர்பாக அறிக்கை விடுத்தார்.

அதுபோல, முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் குறித்தும் அறிக்கை வெளியிட வேண்டும். நேரில் சந்திக்க அனுமதி கிடைத்தால், அவரது உடல்நலம் குறித்து விசாரிப்பேன்.

தமிழக சட்டப்பேரவைக்கு எப்போது தேர்தல் வந்தாலும், அதை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகவே உள்ளது. கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக உள்ளனர். ராகுல் காந்தி வருகை கட்சியினருக்கு நம்பிக்கையை ஊட்டும். சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் அறிவுறுத்தலின்படி நடப்போம் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்