கவுரவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம்: ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தல்

நாட்டில் கவுரவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்க மாநிலத் தலைவர் ஆர்.நல்லகண்ணு வலியுறுத்தியுள்ளார்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இதில் இயக் கத்தின் மாநிலத் தலைவர் ஆர்.நல்ல கண்ணு பங்கேற்று பேசியதாவது:

தமிழகத்தில் தென் மாவட்டங் களில்தான் சாதிக் கொடுமைகள் தொடர்ந்து நடைபெறுவதை அறிந் திருக்கிறோம். அது தற்போது வட மாவட்டங்களிலும் பரவிக்கொண்டி ருக்கிறது. மாநிலத்துக்கே தலை குனிவை ஏற்படுத்தும் வகையில் கவுரவக் கொலைகள் நடைபெற்று வருகின்றன. இது வேதனை அளிக் கும் விதமாக உள்ளது. இதன் உச்ச கட்டமாக ஓமலூரில் தலித் பொறி யியல் மாணவர் கோகுல்ராஜ், பிற சாதி பெண்ணை காதலித்தார் என்பதற்காக திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் 60-க்கும் மேற்பட்ட கவுரவக் கொலைகள் நடந்துள்ளன. இதுபோன்ற கொலைகளை தமிழ கத்தில் அனுமதிக்கக் கூடாது.

ஓ.பன்னீர்செல்வம் முதல்வ ராக இருந்தபோது, தமிழகத்தில் கவுரவக் கொலைகளே நடைபெற வில்லை என்று சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கவுரவக் கொலைகள் நடந்து வருவதற்கு கோகுல்ராஜ் கொலை ஓர் உதாரணம். எனவே கவுரவக் கொலைகளை தடுக்க தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கோகுல்ராஜ் கொலைக்கு காரணமான மேலும் சிலரை கைது செய்ய வேண்டும். இந்த கொலை தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இயக்கத்தின் பொதுச்செயலர் மூ.வீரபாண்டியன், பொருளாளர் பொ.லிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்