ஐபிஎஸ் அதிகாரி மீது மனைவி வரதட்சணை புகார்: ஏடிஜிபியிடம் மனு கொடுத்தார்

ஐபிஎஸ் அதிகாரி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக அவரது மனைவி புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தலைமையிடத்து துணை ஆணையராக இருப்பவர் சந்தோஷ்குமார் ஐபிஎஸ். இவரது மனைவி மேகனா. சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் உள்ள டிஜிபி அலுவலகத்துக்கு நேற்று காலையில் வந்த மேகனா, சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டி.கே.ராஜேந்திரனை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ஐபிஎஸ் அதிகாரி சந்தோஷ் குமாருக்கும் எனக்கும் திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகின்றன. எங்களுக்கு 9 வயதில் ஒரு மகன் இருக்கிறான். முதலில் எங்களது குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்றது. பின்னர் அவர் என்னை மனரீதியாக முதலில் கொடுமைப் படுத்த ஆரம்பித்தார்.

இப்போது வரதட்சணை கேட்கிறார். அவர் புதிதாக ஒரு வீடு வாங்கியிருக்கிறார். அதற்கு கூடுதல் பணம் தேவைப்படுவதால் என் வீட்டில் இருந்து வாங்கி வரச்சொல்கிறார். தொடர்ந்து வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துகிறார். நான் எவ்வளவோ பொறுத்து பார்த்தேன், முடியவில்லை. இதனால் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளேன்.

இதுபோன்று தொடர்ந்து புகார் கொடுத்தால், எனது மகனை அபகரித்துவிடுவதாகவும் மிரட்டுகிறார். எனவே, சந்தோஷ் குமார் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அதைத் தொடர்ந்து வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்த மேகனா, தலைமையிடத்து கூடுதல் ஆணையர் திருஞானத்தை சந்தித்து அதே வரதட்சணை புகாரை கொடுத்தார். புகாரை பெற்றுக்கொண்ட அதிகாரி விசாரணை நடத்துவதாக தெரிவித் துள்ளார்.

வசதியான குடும்பம்

துணை ஆணையர் சந்தோஷ் குமார் உறவினர்களிடம் விசா ரித்தபோது, "ராஜஸ்தானை சேர்ந்த மேகனா, வசதியான குடும்பத்தை சேர்ந்தவர். அவரது தாத்தா ராஜஸ்தானில் அமைச்சராக இருந்திருக்கிறார். சந்தோஷ்குமாருக்கு அரசு சம்பளத்தை தவிர வேறு வருமானம் கிடையாது. மேகனா வசதியாக வாழ ஆசைப்பட்டு, அது முடியாததால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இவர்களின் மகன் ஜெய்ப்பூரில் ஒரு பள்ளியில் படிக்கிறான். அவனை சந்தோஷ்குமார் சந்தித்து பேசுவதற்குக்கூட அனுமதிக்க வில்லை" என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

17 hours ago

தமிழகம்

18 hours ago

தமிழகம்

18 hours ago

மேலும்