மக்களின் கவனத்தை ஈர்க்காத கோவை ‘காஸ் வனவியல் அருங்காட்சியகம்’

கோவையில் அமைந்துள்ள ‘காஸ் வனவியல் அருங்காட்சியகம்’, இந்தியாவில் மிகவும் பழமை வாய்ந்தது. இது மக்களின் கவனத்தை அதிக அளவில் பெறாமல் இருந்து வருகிறது. இந்த வனவியல் அருங்காட்சியகத்துக்கு அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்து வரப்பட்டால், அவர்களுக்கு வனவியல் குறித்த நிறைய விஷயங்கள் அறிந்து கொள்வதற்கு வாய்ப்பாக அமையும் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது.

கோவை ஆர்.எஸ்.புரத்தில் வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1902-ம் ஆண்டில் அப்போதைய வனத்துறை அலுவலர் ஹாரஸ் ஆர்ச்சிபால்ட் காஸ் என்பவரால், அருங்காட்சியகம் கட்டமைக்கப்பட்டது. அன்றைய ஆளுநர் ஆம்தில் இதனைத் திறந்து வைத்தார்.

அருங்காட்சியகம் அமைய வனத்துறை அலுவலர் ‘காஸ்’ காரணமாக இருந்ததால், அந்த அருங்காட்சியகத்துக்கு அவரது பெயரே கடந்த 1905-ம் ஆண்டில் வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த அருங்காட்சியகம் கடந்த 1915-ம் ஆண்டில் புதிய கட்டிடத்தில் பென்லேண்ட் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தியாவின் மிகவும் பழமையான வனவியல் அருங்காட்சியமாக இது உள்ளது.

பல்வேறு வகையான பறவை, விலங்கினங்கள், மரங்கள், தாவர வகைகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் பொறியியல் வேலைப்பாடு எவ்வாறு இருந்தது, பாலத்தை எப்படிக் கட்டினார்கள், அதற்கு என்னென்ன கயிறுகளை பயன்படுத்தினார்கள், மரத்தை எப்படி வளர்த்தார்கள் என்பன குறித்தும் அருங்காட்சியகத்தில் வடிவமைப்பு மாதிரிகளுடன் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை அருங்காட்சியகம் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், பொருளாதார மற்றும் நிர்வாகக் காரணங்களால் அருங்காட்சியகம் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு மூடப்பட்டது. இதனிடையே, வன ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டு வரப்பட்டது.

தற்போது, அருங்காட்சியகம் ஞாயிறு மற்றும் மத்திய அரசு விடுமுறை நாட்களைத் தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 9 முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வருகிறது.

வனம், அதில் வசிக்கும் உயிரினங்கள், தாவரங்கள் உள்ளிட்ட நிறைய விஷயங்களைக் கற்றுத் தரும் இந்த வனவியல் அருங்காட்சியகத்தை, பொதுமக்கள் பார்வையிட்டுச் செல்கின்றனர். ஒரு நபருக்கு ரூ. 5 பார்வைக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இருப்பினும், உள்ளூர் மக்களுக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லாமல் இருப்பதால் அதிகம்பேர் வந்து செல்வது இல்லை. இதைத்தவிர சில தனியார் பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்படுகின்றனர்.

"இந்த அருங்காட்சியகம் குறித்த தகவலை மக்களிடம் கொண்டு செல்லும்பட்சத்தில், அதிக அளவிலான மக்கள் வந்து பார்வையிடும் வாய்ப்பாக அமையும். வனவியல் குறித்து அறிந்து கொள்ளவும் முடியும். இந்தியாவில் இதுபோன்ற வனவியலுக்கு என்ற அருங்காட்சியகங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஆனால், உள்ளூர் குழந்தைகள் அறியாத அளவுக்கு, விளம்பரம் இல்லாமல் செயல்பட்டு வருவது வேதனை தரும் விஷயம்.

கல்வித்துறை சார்பில் அரசுப் பள்ளிக் குழந்தைகள் அழைத்து வரப்பட்டால் மாணவர்களுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக அமையும். அருங்காட்சியகமும் கவனத்தைப் பெறும்" என்கின்றனர் வனவியல் ஆர்வலர்கள்.

இது குறித்து வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன அதிகாரி கூறும்போது, ‘கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் வந்து பொதுமக்கள் பார்த்துச் சென்றனர். தற்போது அந்த அளவுக்கு வருகை இல்லை. பள்ளிக் குழந்தைகளும் பார்வையிட்டுச் செல்கின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் வருகை குறைவுதான்’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்