ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு கொடுத்த சிறுவன்

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டியவர்களுக்கு சென்னையில் லட்டு கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டான் சிறுவன்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே படூர் கிராமத்தை சேர்ந்த ஆகாஷ்(5) என்ற ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து கடந்த ஓராண்டாக பிரச்சாரம் செய்து வருகிறான். தமிழகம் முழுவதும் ஜூலை 1-ம் தேதி முதல் இரு சக்கர வாகனம் ஓட்டும் அனைவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாமல் வந்தவர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கும் சிறுவன்| படம்: எல்.சீனிவாசன்.

அதைத் தொடர்ந்து ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நேற்று மாலை யில் சென்னை மெரினா கடற் கரை காமராஜர் சாலையில் உள்ள காந்தி சிலை சிக்னலில் மேற்கொண்டான்.

சிக்னல் அருகே கையில் லட்டு மற்றும் துண்டு பிரசுரங்களுடன் நின்ற சிறுவன், ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஓட்டிகளுக்கு லட்டும், அணியாமல் வருபவர்களுக்கு துண்டு பிரசுரமும் கொடுத்தான். சிறுவனின் இந்த முயற்சியை பலர் பாராட்டினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்