தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம்: கிரேசி மோகன் வலியுறுத்தல்

தமிழ் எழுத்தாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நடிகரும் நாடக இயக்குநருமான கிரேசி மோகன் கூறியுள்ளார்.

‘மனிதர்களும் நூல்களும்’ என்ற தலைப்பில் சாகித்ய அகாடமி அவ்வப்போது சொற்பொழிவுகளை நடத்தி வருகிறது. சென்னை மயிலாப்பூரில் நேற்று முன்தினம் நடந்த சொற்பொழிவில் கிரேசி மோகன் உரையாற்றினார். அவர் பேசியதாவது:

தமிழ் எழுத்தாளர்களுக்கு நாம் போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. எழுத்தாளர் சுஜாதா உடல்நலக் குறைவுடன் இருந்தபோது, அவருடைய வீட்டில் மின் தூக்கிகூட வேலை பார்க்கவில்லை. ‘தில்லானா மோகனாம்பாள்’ உள்ளிட்ட படைப்புகளுக்கு மிக தத்ரூபமான ஓவியங்கள் வரைந்துள்ள ஓவியர் கோபுலுவை பலர் தெரிந்திருக்கவே மாட்டார்கள்.

தி.ஜ.ர. என்று அறியப்பட்ட தி.ஜ.ரங்கநாதன் என்ற எழுத்தாளர், நவீன தமிழ் இலக்கியத்தின் முன்னோடி. தி.ஜ.ர. மறைவுக்குப் பிறகு அவரது குடும்பத்தினர் தற்போது மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ளனர். அவர்களுக்கு எனது படைப்புகளின் மூலம் கிடைக்கும் சிறு தொகையை அளித்து உதவலாம் என்று முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு கிரேசி மோகன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

21 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்