அலைபேசியில் அழைத்தார் பாடகர் ஓ.எஸ்.அருண். ‘ரத்ன சங்கமம்’ என்ற பெயரில் சிறிய அளவில் தான் செய்து வரும் சமூக சேவை பற்றி பேசினார்.
“இரண்டரை வருஷமா இதை செய்துட்டு வரேன். இப்ப இது பற்றி கொஞ்சம் சத்தம் போட்டு சொல்லணும் என்பது பலரோட கருத்து. அழைப்பிதழ் அனுப்ப றேன்” என்றார்.
பாரதிய வித்யா பவன் அரங்கில் அரை மணி நேர ஆவணப் படமாகத் திரையிடப்பட்டது ரத்ன சங்கமம். எழுத்து, எடிட்டிங், இயக்கம்: எஸ்.பி.காந்தன்.
ஓ.எஸ்.அருணின் கம்பீர ஆலா பனையுடன் தொடங்கும் ஆவணத்தில் நடுநடுவே விளக்க உரையும் தருகிறார் அவர்.
“கடவுள் வரப்பிரசாதமாக கொடுத்திருக்கும் சங்கீதம் மூலமாக நான் சந்தோஷமாகவும், வளமாகவும் இருக்கிறேன். அதற்கு காரணம் இந்த சமூகம். அப்படிப்பட்ட சமூகத்துக்கு என் னால் இயன்ற அளவு திருப்பிக் கொடுக்க விரும்பினேன். ரத்ன சங்கமம் தோன்றியது” என்கிறார். படத்தில் அவ்வப்போது சங்கமத்தின்போது தனக்கு ஏற்பட்ட உணர்ச்சிகரமான அனுபவங்களை உருக்கமாக பகிர்ந்து கொள்கிறார்.
உமையாள்புரம் சிவராமன், கிரேசி மோகன் உள்ளிட்ட சிலரும் அருணின் சமூக சேவையை சிலாகித்துப் பேசியிருக்கிறார்கள். ( ‘படுக்க வைத்தால் வீணை, நிற்க வைத்தால் தம்புரா’ என்று கிரேசி மோகன் நிறைய கூட்டங்களில் சொன்ன ஜோக் இதிலும் உண்டு!)
சென்னையில் அன்னை இல் லம் சென்று அங்குள்ள முதியோர் களுக்கு அருண் பாடியிருப்பது திரையில் ஓடுகிறது. அங்கே 80, 90 நிரம்பிய மூதாட்டிகள் (100 வயது கடந்த பாட்டி ஒருவரும் கால் நீட்டி உட்கார்ந்திருக்கிறார்!) இவர் பாடுவது கேட்டு நெகிழ்ந்து போகிறார்கள்.
“அவர்களுக்குப் புடவைகள் வாங்கி சென்றோம். ஒவ்வொரு வரும் அதை அன்புடன் பெற்றுக் கொண்டு, நெஞ்சுடன் அணைத்துக் கொண்டு, ‘Our son Arun’ என்று வாழ்த்தினார்கள்” என்றார் அருண், கண்கள் கலங்க.
பாட்டு பாடியதோடு பணி முடிந்து விட்டதாக நினைக்காமல் இல்லத்து வாசிகளுக்கு ஜமுக்காளம், போர்வை, போன்ற அத்தியாவசி யங்கள் வாங்கித் தந்திருக்கிறார் அருண்.
ஆவணப்படம் தொடருகிறது..
அநாதை இல்லம் சென்று அங்கு தங்கியிருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு நடுவே உட் கார்ந்து பாடுகிறார். சிறுசுகள் கண் கள் மின்ன, கைதட்டி மகிழ்கின் றன. ஒரு குழந்தை ஸோலோ வாகப் பாடுகிறது. மற்றவர்கள் பாராட்டும்போது கூச்சத்துடன் சிரித்துக் கொண்டே இருப்பிடத் துக்கு ஓடுகிறது.
காட்சி மாறும்போது, பார்வை யற்ற சிறுவர், சிறுமியருக்கு நடுவே பாடிக்கொண்டிருக்கிறார் ஓ.எஸ்.அருண். காதுகள் வழியே நுழையும் இசையை உள்வாங்கி, திருப்பிப் பாடி குதூகலிக்கின்றன அந்த பிஞ்சுகள்.
இன்னொரு இடத்தில் ‘குறை யொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா..’ பாடிக் கொண்டிருக் கிறார் அருண். சுற்றிலும் ஆடிஸம் குழந்தைகள். அவை தலை சாய்த்து சிரிக்கும்போது ஆயிரம் கவிதைகள் கேட்ட உணர்வு.
சென்னை மட்டுமல்லாமல் செங்கல்பட்டு, தஞ்சாவூர் அருகே உள்ள கிராமங்கள் மற்றும் பெங்க ளூரு போன்ற இடங்களுக்கும் சென்று இந்த சங்கீத - சமூக சேவையைத் தொடர்கிறார் அருண். ஆனால் பூகோள ரீதியாக இதை மேலும் விரிவுபடுத்த அவர் விரும்பவில்லை.
மாறாக ஏற்கெனவே ஒரு முறை போன இடத்துக்கே மறுபடியும் சென்று, அங்கு தங்கியிருப்பவர்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை பெருக்க வேண்டும் என்று பிரியப்படுகிறார் - மற்றவர்களின் உதவியுடன்.
அன்று, வித்யா பவனில் ஆவணப் படம் ஓடி முடித்ததும், லைவ் கச்சேரி செய்தார் ஓ.எஸ்.அருண். முல்லைவாசல் சந்திரமௌலி (வயலின்), திரு வாரூர் பக்தவத்சலம் (மிருதங்கம்), பி.எஸ்.புருஷோத்தமன் (கஞ்சிரா), வைக்கம் கோபாலகிருஷ்ணன் (கடம்), பாலாஜி சாய்ராம் (மோர்சிங்) என்று ஃபுல்பெஞ்ச் கச்சேரி! கணீர்க் குரலில் அருண் பாடிய ரஞ்சனியும், நடபைரவியும், அடாணாவும் அரங்கம் கடந்து சென்று அன்னை இல்லத்து மூதாட்டி களையும், இதர ஸ்பெஷல் குழந்தைகளையும் குளிர்வித் திருக்கும்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago