ரூ.419 கோடியில் உயர்கல்வித் துறை கட்டிடங்களை ஜெயலலிதா திறந்துவைத்தார்

முதல்வர் ஜெயலலிதா உயர்கல்வித் துறையின் சார்பில் 527 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டிடங்களை திறந்து வைத்தும், அடிக்கல் நாட்டியும் இருக்கிறார்.

இதுகுறித்து செய்தி- மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா 12.6.2015 அன்று தலைமைச் செயலகத்தில், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் 54 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு பொறியியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும், 419 கோடியே 89 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டிடங்களையும், 13 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்கலைக்கழகக் கட்டிடங்களையும் திறந்து வைத்தார். இதுவன்றி, 40 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்கள்.

தமிழகத்திலுள்ள ஏழை, எளிய மக்கள், உயர்கல்வி கற்று அதன்மூலம் வேலை வாய்ப்பினைப் பெற்று, வாழ்வில் சிறப்பான நிலையை அடையவேண்டும் என்ற நோக்கில், இதுவரை முன் எப்போதும் இல்லாத வகையில், கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள், 11 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள், 38 அரசு மற்றும் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், என மொத்தம் 53 கல்லூரிகளை முதல்வர் ஜெயலலிதா அமைத்துக் கொடுத்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக தமிழகத்தில் உயர்கல்வியில் மாணவர் மொத்த சேர்க்கை விகிதத்தை 42% ஆக உயர்த்தி சாதனை புரிந்துள்ளார்.

தேனி மாவட்டம் - போடிநாயக்கனூரில் 3,86,947 சதுர அடி கட்டிட பரப்பளவில், கல்வி நிர்வாகக் கட்டிடங்கள், பட்டறை, மாணவ, மாணவியர் விடுதிகள் உள்ளிட்ட வசதிகளுடன் 54 கோடியே 8 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு பொறியியல் கல்லூரியை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

தஞ்சாவூர் மற்றும் தருமபுரி மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவலகங்கள்; திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஸ்ரீரங்கத்தில் 60 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், தஞ்சாவூர் மாவட்டம் - செங்கிப்பட்டியில் 49 கோடியே 38 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், தருமபுரி மாவட்டம் - செட்டிக்கரையில் 49 கோடியே 38 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு பொறியியல் கல்லூரிகளின் நிர்வாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், ஆய்வகங்கள், வரைவுக் கூடம், விடுதிகள், கலையரங்கம், குடியிருப்புக் கட்டிடங்களை திறந்து வைத்தார்.

மேலும், சேலம் - அரசு பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும்; கோயம்புத்தூர் - அரசு பொறியியல் கல்லூரியில் 3 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள சமூக திறன் மேம்பாட்டு மையம் மற்றும் மகளிர் விடுதி; கோயம்புத்தூரில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் மண்டல மையத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக, வகுப்பறை மற்றும் விடுதிக் கட்டிடங்கள்; அண்ணா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கடலூர் மாவட்டம் - பண்ருட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் விடுதி; திண்டுக்கல் மாவட்டம்- சில்வார்பட்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகளை திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் - நாகர்கோவிலில் உள்ள பொறியியல் கல்லூரியில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள்; புதுக்கோட்டை மாவட்டம் - கறம்பகுடியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், விருதுநகர் மாவட்டம் - சிவகாசியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், நாமக்கல் மாவட்டம் - குமாரபாளையத்தில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், நூலகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகக் கட்டிடங்கள் முதல்வர் ஜெயலலிதாவால் திறக்கப்பட்டன.

தருமபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிபட்டியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், சேலம் மாவட்டம் - எடப்பாடியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள பெரியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிர்வாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், நூலகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகக் கட்டிடங்கள்; பெரம்பலூர் மாவட்டம் - வேப்பூரில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நிருவாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், நூலகம், கருத்தரங்கக் கூடம், ஆய்வகக் கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வகோட்டை, விழுப்புரம் மாவட்டம் -சங்கராபுரம், அரியலூர் மாவட்டம் - கீழப்பழூர், தேனி மாவட்டம் - ஆண்டிபட்டி, மதுரை மாவட்டம் - உசிலம்பட்டி மற்றும் செக்கானூரணி ஆகிய இடங்களில் அமைந்துள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு தலா 13 கோடியே 96 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 83 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், கலையரங்கம், வரைவுக் கூடம், கருத்தரங்கக் கூடம், பட்டறை, விடுதிகள், ஆய்வகக் கட்டிடங்கள் முதல்வரால் திறந்து வைக்கப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் - ஊத்தங்கரையில் 14 கோடியே 38 லட்சத்து 38 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், வேலூர் மாவட்டம் - ஜோலார்பேட்டையில் 14 கோடியே 38 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், திருவண்ணாமலை மாவட்டம் - செய்யாரில் 32 கோடியே 51 லட்சத்து 98 ஆயிரம் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளின் நிர்வாக அலுவலகக் கட்டிடம், வகுப்பறைகள், கலையரங்கம், வரைவுக் கூடம், கருத்தரங்கக் கூடம், பட்டறை, விடுதிகள், ஆய்வகக் கட்டிடங்கள்; காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகத்தின் தொண்டி வளாகத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கடலியல் மற்றும் கடலோரவியல் துறைக்கான பட்டமேற்படிப்பு மாணவர் விடுதி; திருச்சிராப்பள்ளி, பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 1 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கலையரங்கம், 1 கோடியே 57 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் பொது கருத்தரங்கக் கூடம், 44 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உள்விளையாட்டரங்கம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் - ஒரத்தநாட்டில் அமைந்துள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டன.

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வளாகத்தில் 1 கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கணக்குத் துறைக் கட்டிடம், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலகம்; 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நலவாழ்வு மையம் மற்றும் பலவகை பயன்பாட்டு கூடம்; 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆங்கிலத் துறை கட்டிடம்; 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புள்ளியியல் துறை கட்டிடம் மற்றும் ஆழ்வார்குறிச்சியில் சுற்றுச்சூழல் அறிவியலுக்கான ஸ்ரீ பரமகல்யாணி மையத்தில் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிக் கட்டிடம் என மொத்தம் 487 கோடியே 71 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக கட்டிடங்களை முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

திருநெல்வேலியில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள கல்லூரிக் கல்வி மண்டல இணை இயக்குநர் அலுவலகக் கட்டிடம்; இராமநாதபுரம் மாவட்டம் - திருவாடனையில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், கிருஷ்ணகிரி மாவட்டம் - ஓசூரில் 7 கோடியே 97 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், பெரம்பலூர் மாவட்டம் - வேப்பந்தட்டையில் 7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டிலும் கட்டப்படவுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் நிருவாக மற்றும் வகுப்பறைக் கட்டிடங்கள் முதல்வர் ஜெயலலிதாவால் திறந்து வைக்கப்பட்டன.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - லால்குடியில் 7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடங்கள்; ஈரோடு மாவட்டம் - மொடக்குறிச்சியில் 7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள பாரதியார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டிடங்கள்; மதுரையில் 1 கோடியே 67 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியின் பட்டறைக் கட்டிடம் என மொத்தம் 40 கோடியே 25 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான கல்லூரிக் கட்டிடங்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

முதல்வர் ஜெயலலிதாவால் உயர்கல்வித் துறையின் சார்பில் திறந்து வைக்கப்பட்டதும், அடிக்கல் நாட்டப்பட்டதுமான கட்டிடங்களின் மொத்த மதிப்பு 527 கோடியே 97 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் ஆகும்"

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்