குறுஞ்செய்தி அனுப்புபவர்களுக்கு சாலையில் தனி இடம்: சென்னையில் அறிமுகப்படுத்த திட்டம்?

By செய்திப்பிரிவு

குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே சாலையில் நடந்து செல்பவர்களுக்கு பெல்ஜியத்தில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் இதே போன்று வசதி ஏற்படுத்தி தரலாம் என்று மாநகராட்சி ஆணையருக்கு பரிந்துரை அனுப்பப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்த பின்னர், சாலையில் செல்லும்போதும் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டோ அல்லது வாட்ஸ் ஆப்-ல் சாட் செய்து கொண்டோ செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் விபத்து கள் அதிகரித்து வருகிறது. இதைத் தவிர்க்க பெல்ஜியத்தில் உள்ள ஆண்ட்வர்ப் என்ற நகரில் குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே செல்பவர் களுக்கென ‘டெக்ஸ்ட் வாக்கிங் லேன்’ என்ற பெயரில் சாலையில் தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போன்ற வசதிகள் சீனாவில் உள்ள சாங்கிங் நகரம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ளது. இதில் சாங்கிங் நகரத்துடன் சென்னை மாநகராட்சி சமீபத்தில் சகோதரி நகரங்கள் ஒப்பந்தத்தை கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் இரு நகரங்களுக்கும் இடையே தொழில்நுட்ப, கலாச்சார பரிமாற்றம் ஏற்படும்.

இந்நிலையில் டெக்ஸ்ட் வாக்கிங் லேனை சென்னையில் அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரை மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, “புதிதாக போடப்படும் சாலைகளில், அகலமான ஒரு சில சாலைகளில் மட்டும் டெக்ஸ்ட் வாக்கிங் லேன் அமைக்க முயற்சி செய்யலாமா என்று யோசித்து வருகிறோம். இதற்கு பெரிதாக செலவாகாது. ஆணையரிடம் இதற்கான பரிந்துரைகள் அனுப்பப்பட்டுள்ளன”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்