தேடும் பணியில் பின்னடைவு: களிமண் பகுதியில் புதைந்திருந்தால் விமானத்தை கண்டுபிடிப்பது சிரமம் - ஐஐடி பேராசிரியர் தகவல்

By செய்திப்பிரிவு

காரைக்கால் அருகே 3 பேருடன் காணாமல் போன கடலோர காவல் படை விமானத்தை தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. கடலுக்கு அடியில் களிமண் பகுதியில் விமானம் புதைந்திருந்தால் அதைக் கண்டுபிடிப்பது சிரமம் என ஐஐடி பேராசிரியர் தெரிவித் துள்ளார்.

கடலோர காவல்படைக்குச் சொந்தமான ‘சிஜி 791’ என்ற ‘டார்னியர்’ சிறிய ரக விமானம் கடந்த 8-ம் தேதி காரைக்கால் பகுதி யில் ரோந்துப் பணியில் ஈடுபட்டி ருந்தபோது திடீரென காணாமல் போனது. அதில் விமானி வித்யாசாகர், துணை விமானி சோனி மற்றும் வழிகாட்டி சுபாஷ் சுரேஷ் ஆகிய 3 பேர் இருந்தனர்.

விமானத்தை தேடும் பணியில் கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அத்துடன், ‘பி-8ஐ’ என்ற போர் விமானமும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை ‘ஐஎன்எஸ் சந்த்யாக்’ என்ற கடற்படை கப்பல் மூலம் தேடுதல் பணியில் ஈடுபட்டபோது காணாமல் போன விமானத்தில் இருந்து சிக்னல் கிடைத்ததாகக் கூறப்பட்டது. இதை யடுத்து, அந்த இடத்தில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எனினும், விமானத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை.

தேசிய கடலாராய்ச்சி மையத்தின் அதிநவீன ‘சாகர்நிதி’ என்ற ஆய்வுக் கப்பல் மூலம் மாயமான விமானத்தின் கருப்புப் பெட்டி தீவிரமாக தேடப்பட்டு வருகிறது. ஆனால், இதுவரை எந்தத் தடயமும் கிடைக்காததால் விமானத்தைத் தேடும் பணியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், காணாமல் போன விமானம் கடலுக்கு அடியில் சேற்றில் சிக்கியிருந்தால் சிக்னல் கிடைப்பதில் இடையூறு ஏற்படும் என சென்னை ஐஐடி கடல் பொறி யியல் பிரிவு பேராசிரியர் வி.ஜி.இடி சாண்டி கூறியுள்ளார். இதுகுறித்து, ‘தி இந்து’விடம் அவர் கூறியதாவது:

காணாமல் போன விமானம் களிமண் பகுதியில் புதைந்திருக் கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதன் காரணமாகக்கூட விமானத் தில் இருந்து சிக்னல் பெறுவதில் சிரமம் ஏற்பட்டிருக்கலாம்.

இவ்வாறு பேராசிரியர் இடி சாண்டி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

19 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்