மாயமான விமானத்தில் இருந்த என் மகன் உயிருடன் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள்: சென்னை வீரரின் தாயார் வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

விமானத்தில் இருந்த எனது மகன் உட்பட 3 பேரும் உயிருடன் திரும்ப பிரார்த்தனை செய்யுங்கள் என்று சென்னை வீரரின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான விமானம் கடந்த 8-ம் தேதி நாகப்பட்டினம் கடற்கரை பகுதியில் மாயமானது. அதைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்த விமானத்தில் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் சுபாஷ், எம்.கே.சோனி, வித்யா சாகர் ஆகியோர் இருந்தனர்.

இவர்களில் சுபாஷ் சென்னை நங்கநல்லூரை சேர்ந்தவர். அவ ருக்கு தீபலட்சுமி(29) என்ற மனைவி யும், இஷான் என்ற ஆண் குழந்தை யும் உள்ளனர். சுபாஷின் தந்தை சுரேஷ், சென்னை துறைமுகத்தில் தொழில்நுட்ப பணியாளராக உள் ளார். அவரது தாயார் பத்மா. சுபாஷ் பி.டெக் முடித்து விட்டு அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் பைலட் பயிற்சி பெற்றுள்ளார். கடந்த 2008 ம் ஆண்டு அவர் கடலோர பாதுகாப்பு படையில் சேர்ந்துள்ளார்.

சுபாஷ் சென்ற விமானம் மாய மான சம்பவம் அவரது குடும்பத் தினரை கவலையில் ஆழ்த்தியுள் ளது. இதுபற்றி அவரது தாயார் பத்மா கூறியதாவது:

8 ம் தேதி காலையில் பணிக்கு செல்லும்போது மாலையில் வீட் டுக்கு வந்து விடுவேன் என்று சுபாஷ் கூறினான். பின்னர் மாலையில் போன் செய்து கூடுதல் பணி இருப் பதால் வருவதற்கு தாமதமாகும் என்றான். இரவு 11 மணி வரை வீட்டுக்கு வராததால் நாங்கள் பல முறை போன் செய்து பார்த்தோம். ஆனால் தொடர்பு கிடைக்கவில்லை.

அதிகாலை 3 மணியளவில் எங்கள் வீட்டுக்கு இந்திய கடலோர படையின் 2 வீரர்கள் வந்து விமானம் மாயமானதையும், அதைத் தேடும் பணி நடந்து வருவதையும் தெரிவித் தனர். அதைக்கேட்டு அதிர்ச்சியில் உறைந்து விட்டோம். நாட்டுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் அவ னுக்கு ஒன்றும் ஆகாது. நிச்சயம் திரும்பி வருவான். அவனுக்காக எங்கள் குடும்பத்தில் உள்ள அனை வரும் ஆண்டவனிடம் வேண்டிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் வேண்டிக்கொள்ளுங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்