இம்மாதம் 15-ம் தேதிக்குள் ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்: காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை மற்றும் திறந்தவெளி கிணறுகள் அனைத்தையும் ஜூன் 15-ம் தேதிக்குள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயன்பாடற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளால் விபத்துகள் ஏற்பட்டு குழந்தைகள் உயிரிழக்கின்றன. இதைத் தடுக்கும் நோக்கில் ஊரக வளர்ச்சி அதிகாரிகள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

அதில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டார வளர்ச்சி அலு வலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர் கள், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் கிராம ஊராட்சிகளில் பயன்பாடற்ற நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகளை கண் டறிந்து கணக்கீடு செய்ய வேண்டும். அவற்றை ஜூன் 15-ம் தேதிக்குள் ஊராட்சி மன்றத் தலைவர்களால் கிணற்றின் உரிமையாளர் மூலம் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்