ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கான கருத்தரங்கம்: சென்னையில் 20-ம் தேதி நடக்கிறது

ஒடுக்கப்பட்டோர் எழுச்சிக்கான வழிகள் என்ற தலைப்பில் ஜூன் 20-ம் தேதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறவுள்ளது. இந்த கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்திருக்கும் ‘அக்கறையுள்ள குடிமக்கள் சங்கத்தின்’ சார்பில் எழுத்தாளர் ஞானி கூறியதாவது:

ஒடுக்கப்பட்டோர் தம் வாழ்வில் மீண்டெழுவதற்கான வழிகள் குறித்து பல சிறப்பு விருந்தினர்கள் கருத்துகளை தெரிவிக்க வருகின்றனர். இந்த தலைப்பில் பேசுவதற்கு பொருத்தமாக முன்னாள் மத்திய அரசு செயலாளரும், மண்டல் ஆணையம், தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் முதலியவற்றில் பணியாற்றியவருமான பி.எஸ்.கிருஷ்ணன் சிறப்புரையாற்றுகிறார்.

மேலும் சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.சந்துரு, முன்னாள் துணைவேந்தர் வெ.வசந்தி தேவி, வழக்கறிஞர் பதர் சயீத் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கம் வரும் 20-ம் தேதி மயிலாப்பூர், சிஐடி காலனியில் உள்ள கவிக்கோ அரங்கத்தில் மாலை 5.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்