தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா: தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதியுலா

காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள பிரசித்திப் பெற்ற தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, தங்க காக்கை வாகனத்தில் சனி பகவான் வீதியுலா நடைபெற்றது.

திருநள்ளாறில் சனி பகவான் தனி சன்னதி கொண்டுள்ள தர்ப்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவ விழா மே 15-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழாவின் முக்கிய நிகழ்வான சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா சென்றார்.

இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான், கோயில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே சனி பகவான் தங்க காக்கை வாகனத்தில் வீதியுலா செல்வதால் அதனைக் காணவும், சனி பகவானை வழிபடவும் காரைக்கால் மற்றும் தமிழகப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர்.

தொடர்ந்து, நேற்று இரவு தெப்ப உற்சவம் நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்