வரதராஜ பெருமாள் கோயில் தீர்த்தவாரி: புனித நீராடல்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவ விழாவின் தொடர்ச்சியாக நேற்று தீர்த்தவாரி நடைபெற்றது. இவ்விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனித நீராடினர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் 10 நாள் வைகாசி பிரம்மோற்சவ விழா கொடியேற் றத்துடன் கடந்த மே 30-ம் தேதி தொடங்கியது. 3-ம் நாள் கருட சேவையும், 7-ம் நாள் தேரோட்டமும் நடை பெற்றது. 9-ம் நாளான நேற்று கோயில் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது.

இதையொட்டி கல்யாண மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாய் வரதராஜ பெருமாள் எழுந்தருளினார். அங்கு சிறப்பு ஆராதனை நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து வரதராஜ பெருமாள் பக்தர்கள் வெள்ளத்தில் ஊர்வலமாகச் சென்று குளத்தில் இறங்கினார். அப்போது பிரசாதம் குளத்தில் வீசப்பட்டது.

இதைத் தொடர்ந்து பக்தர்கள் குளத்தில் இறங்கி புனித நீராடினார். பின்னர் வரதராஜர் பக்தர்கள் புடைசூழ உற்சவர் அறைக்கு புறப்பட்டார். இவ்விழாவையொட்டி கோயில் குளத்தைச் சுற்றி 150-க்கும் மேற் பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்