தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்று தொடர்புடைய துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டாஸ்மாக் கடைகள் இனி மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே இயங்கும் என்ற செய்தி இன்று காலை முதல் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரசு இவ்வாறு நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கத்தக்கது எனும் ரீதியில் கருத்துகள் பகிரப்பட்டன.
இந்த வேலை நேரம் படிப்படியாக குறைந்து, முழுமையாக டாஸ்மாக் இல்லாத தமிழகம் வருவதற்கு அடித்தளம் அமைய வாய்ப்புள்ளது என்கிற ரீதியில் நம்பிக்கைப் பதிவுகளும் பல இடம்பெற்றன.
இந்த நிலையில், டாஸ்மாக் நிறுவனத்தின் முக்கிய உயரதிகாரி ஒருவரை தொடர்புகொண்டு விசாரித்தோம். அவர், "வேலை நேர மாற்றம் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் எங்களுக்கு வரவில்லை. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளின் வேலை நேரத்தில் மாற்றம் எதுவும் இல்லை" என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அரசு அதிகாரிகள் தரப்பில் இருந்து விரைவில் உரிய விளக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது டாஸ்மாக் மதுக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
20 hours ago
தமிழகம்
21 hours ago