சமூக வலைதளங்கள், இணையதளம் மூலம் கருணாநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு

திமுக தலைவர் கருணாநிதியின் 92-வது பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ் செய்தி மூலம் வாழ்த்து தெரிவிக்க சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திமுக தலைவர் கருணாநிதி, நாளை 92-வது வயதில் அடி யெடுத்து வைக்கிறார். இதை யொட்டி நாளை காலை அண்ணா, பெரியார் நினைவிடங்களில் கருணா நிதி மலர்தூவி மரியாதை செலுத்து கிறார். பின்னர் காலை 9 மணி முதல் அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்கள், நிர்வாகிகளிடம் வாழ்த்து பெறுகிறார். மாலை 6 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதுதவிர கருத்தரங்கம், கவியரங்கம், விளையாட்டுப் போட்டிகள், ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குதல், மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதைப் போட்டிகளுக்கு திமுக வினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

மேலும் இணையதளம், சமூக வலைதளங்கள் மற்றும் குறுஞ் செய்தி மூலம் கருணாநிதிக்கு திமுக தொண்டர்களும், பொதுமக் களும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கும் வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது. இந்த வசதியை கருணாநிதி நேற்று தொடங்கி வைத்தார்.

குறுஞ்செய்தி மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் 54242 என்ற எண்ணுக்கு DMK என டைப் செய்து இடைவெளி விட்டு வாழ்த் துச் செய்தியை பதிவு செய்யலாம்.

இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புபவர்கள். கருணாநிதியின் www.kalaignarkarunanidhi.com என்ற இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் தங்கள் வாழ்த்துச் செய்தியை பதிவு செய்யலாம்.

முகநூல், டிவிட்டர், கூகுள் பிளஸ் ஆகிய சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவிக்க விரும்புவோர் #kalaignar92, #HBDMK, #கலைஞர் 92 ஆகிய ஹாஸ்டாக் முறையினை பயன்படுத்தி வாழ்த்து தெரிவிக் கலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

33 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்