சுனாமி குடியிருப்புகள் கட்டித் தருவதாக பலரிடம் மோசடி: கணவன், மனைவியை பிடித்து கொடுத்த பொதுமக்கள்

சுனாமி குடியிருப்புகள் கட்டித் தருவதாக பணம் வாங்கி மோசடி செய்த கணவன், மனைவியிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை எர்ணாவூர் தியாகராயபுரம் தாங்கல் பகுதியில் வசிக்கும் மீனவ மக்களிடமும், அதை சுற்றி வசிக்கும் மக்களிடமும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் சுனாமி குடியிருப்புகள் கட்டித் தரு வதாக கூறி அப்துல்சத்தார் என்பவர் பணம் வசூல் செய்துள்ளார். குடிசை மாற்று வாரியத்தில் அதிகாரியாக இருப்பதாகவும் அப்துல் சத்தார் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரிடமும் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை சுமார் 200 பேரிடம் வசூல் செய்திருக்கிறார். இதற்கு அவரது மனைவி, மகனும் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் அவர் கூறியபடி சுனாமி குடியிருப்புகள் கட் டப்படவில்லை. பணம் கொடுத்தவர்கள் அப்துல் சத்தாரிடம் கேட்கும்போதெல் லாம் பல்வேறு காரணங் களை கூறி தட்டிக் கழித் திருக்கிறார். பணம் கொடுத்து ஒரு ஆண்டு கடந்த நிலை யில் பணம் கொடுத்து ஏமாந் தவர்கள் அப்துல் சத்தார் குறித்து விசாரித்தபோது, அவர் குடிசை மாற்று வாரிய அதிகாரியே இல்லை என்பது தெரிந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அப் துல் சத்தார், அவரது மனைவி, மகன் ஆகிய 3 பேரையும் பிடித்து ஆட்டோவில் ஏற்றி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் வேப்பேரி போலீஸார் அவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்துல் சத்தாரிடம் நடத் திய சோதனையில் தமிழக அரசு முத்திரையுடன் கூடிய ஒரு அடையாள அட்டை இருந்தது.

விசாரணையில் அதை போலியாக தயாரித் திருப்பது தெரிந்தது. அப்துல் சத்தார், அவரது மனைவி, மகனிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

42 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்