மாற்றுத் திறனாளிகளுக்கான உடற்கல்வியியல் பாடம் விரைவில் தொடக்கம்: அழகப்பா பல்கலை. புதிய துணைவேந்தர் தகவல்

காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்துக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக துணை வேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருந்தது. இந்நிலையில் இப்பல்கலைக்கழகத்தின் 9-வது துணை வேந்தராக எஸ். சுப்பையா நேற்று பொறுப்பேற்றார். இவர் அழகப்பா பல்கலைக்கழக ஆங்கிலம் மற்றும் அயல்நாட்டு மொழிகள் துறைத் தலைவராகப் பணியாற்றியவர்.

இவரது சொந்த ஊர் புதுக் கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் தாலுகா பெரியபட்ட மங்கலம். இவரது மனைவி அழகப்பா அரசு கலைக்கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரிகிறார். இவர்களுக்கு மகள், 2 மகன்கள் உள்ளனர்.

புதிய துணைவேந்தர் பதவி யேற்பு நிகழ்ச்சியில் பல்கலைக் கழகப் பதிவாளர் வெ.மாணிக்க வாசகம், ஆட்சிக் குழு உறுப்பினர் கள் எஸ். மணிசங்கர், கருத்த பாண்டியன், ஆர்.தண்டபாணி, கல்லூரி வளர்ச்சிக்குழு முதன்மை யர் செந்தில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

துணைவேந்தர் எஸ். சுப்பையா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

‘‘தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத் திறனாளிகளுக்கான உடற் கல்வியியல் பாடம் தொடங்க தமிழக முதல்வர் அனுமதி வழங்கி யுள்ளார். அழகப்பா பல்கலைக் கழகத்தில் இப்பாடம் விரைவில் தொடங்கப்படும். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர், கட லாடி, திருவாடானையில் புதிய அரசுக் கலைக்கல்லூரிகளில் உள் கட்டமைப்பு, இதர வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தை தேசிய ஆற்றல்சார் மையமாக தரம் உயர்த்தவும், சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகமாக விரிவுபடுத்துவதும் அடுத்த மூன் றாண்டுகளின் தொலை நோக்குத் திட்டமாக இருக்கும்.

காரைக்குடி பகுதியின் கட்டிடக் கலை, சமையற்கலை மரபைக் காக்கும் வகையில், சுற்றுலா மேம் பாடு மற்றும் மரபு சார்ந்த பட்டயம்/சான்றிதழ் படிப்புகளை விரைவில் தொடங்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி வாய்ப்புகளை வழங்கிடும் வகையில், அழகப்பா பல்கலைக் கழக இணைப்புக் கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர் எண் ணிக்கையை 30 சதவீதம் அதிகப் படுத்துவதற்கான செயல்பாடுகள் நிகழ் கல்வியாண்டு முதலே மேற் கொள்ளப்படும். புதிய சிறப்புக் கல்வியியல் துறை உருவாக்கப் படும். பொருளாதாரத்துக்கு தனித் துறை தொடங்கப்படும்.

வரலாறு மற்றும் தாவரவியலில் புதிய முதுகலைப் பிரிவுகள் விரைவில் தொடங்கப்படும். சுய உதவிக்குழு, குழந்தை பராமரிப்பு, மதிப்புக் கல்வி, சிறுதொழில் மற்றும் செட்டிநாடு பாரம்பரியப் படிப்புகள் தொடர்பான பல்வேறு ஆற்றல்சார் மையங்கள் உரு வாக்கப்படும். விரிவாக்கம், வேலை வாய்ப்பு உதவி மற்றும் மாணவர் நலனுக்காக ஒரு புதிய துறை உருவாக்கப்படும்.

உயிரி தொழில்நுட்பவியல், தொழிலக வேதியியல், இயற்பியல் மற்றும் கல்வியியல் துறைகள் ஆற்றல்சார் மையமாக தரம் உயர்த்தப்படும்.’’

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்