ஆசிய தடகளத்தில் தங்கம் வென்றவருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா

திருச்சி மாநகராட்சி 37-வது வார்டுக்கு உட்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்து, குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தனர்.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ் உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.

இக் கூட்டத்தில் மனு அளிப்பதற்காக திருச்சி மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட பாண்டியன் தெரு, பெரியார் தெரு, வள்ளுவர் நகர் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 150 பெண்கள் ஆட்சியர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டுவந்தனர். இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியின் மாவட்ட மகளிர் அணி தலைவி ராபியத்துல் பஷ்ரியா தலைமையில் திரண்டு வந்த பெண்கள், ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

உதவி கோரி மனு

திருச்சி பீம நகரைச் சேர்ந்த அமீருதீன் பாபு, மாற்றுத் திறனாளியான தனது மகள் காமிலா பானுவுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து மனு அளித்தார். “26 வயதான என் மகள் காமிலா பானுவுக்கு 3 வயதில் கடும் காய்ச்சல் ஏற்பட்டு உடல்நலம் குன்றியது.

தற்போது உடல் போதிய வளர்ச்சியின்றி குழந்தைபோல இருக்கும் காமிலாவைப் பராமரிக்க போதிய வருவாய்க்கு வழியில்லை. எனவே, சுயதொழில் செய்து வருவாய் ஈட்ட ஏதுவாக பெட்டிக்கடை அமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரி மனு அளித்தார்.

விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு அளித்த மனுவில், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி மாதந்தோறும் தண்ணீர் திறந்துவிட மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து காந்திய உடையில் திருச்சி நெ.1 டோல்கேட் அருகே ஜூன் 13-ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்க அனுமதி வழங்கவேண்டும். அனுமதி மறுக்கப்படும் நிலையில் முக்கொம்பு மேலணையிலிருந்து காவிரியில் விவசாயிகள் குதித்து தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்” என தெரிவித்திருந்தார்.

479 மனுக்கள்...

இக்கூட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா மற்றும் பட்டா மாறுதல் கோரி 126 மனுக்களும், ரேஷன் கார்டு தொடர்பாக 29, வேலைவாய்ப்பு கோரி 21, முதியோர், விபத்து நிவாரணம், மாற்றுத் திறனாளிகள், நலிந்தோர் நலத்திட்ட மற்றும் விதவை உதவித்தொகை கோரி 99 மனுக்கள் உட்பட மொத்தம் 479 மனுக்கள் பெறப்பட்டன.

தங்கம் வென்றவருக்கு…

கூட்டத்தில், சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் திருச்சி கிழக்கு வட்டத்தைச் சேர்ந்த 14 பேருக்கு நலிந்தோர் நலத்திட்ட உதவி தலா ரூ.10,000, ஸ்ரீரங்கம், திருச்சி கிழக்கு வட்டங்களைச் சேர்ந்த 9 பேருக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை, ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற லால்குடி வட்டம், மணக்கால் ஊராட்சியைச் சேர்ந்த ஆரோக்கிய ராஜீவின் தாய் சவுந்தர வள்ளிக்கு இலவச வீட்டுமனைக்கான பட்டா ஆகியவற்றை ஆட்சியர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

11 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்