ஆம்பூர் கலவரம் தொடர்பாக 112 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு: காவல் ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜ் சஸ்பெண்ட்

வேலூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த காதர்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஷமீல்அஹ்மது. இவர் உயிரிழந்ததை தொடர்ந்து ஆத்திரமடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒருசிலர் பயங்கர வன் முறையில் ஈடுபட்டு வாகனங்கள், கடைகளுக்கும் தீ வைத்தனர்.

இந்த கலவரம் தொடர்பாக 200-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் அழைத்துச் சென்றனர். இதற்கு அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்பூர் கிராம நிர்வாக அலுவல கத்தை நேற்று காலை முற்றுகை யிட்டனர். அவர்களிடம் சமரசம் பேசிய போலீஸார், வழக்கில் தொடர் பில்லாதவர்களை விடுவிப்பதாகக் கூறி, 90 பேரை விடுவித்தனர்.

112 பேர் மீது வழக்கு பதிவு

கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் நேற்று காலை ஆம்பூருக்கு வந்தார். நிலைமை குறித்து, ஐஜி மஞ்சு நாதாவிடம் கேட்டறிந்தார். அப் போது செய்தியாளர்களிடம் ஐஜி மஞ்சுநாதா கூறும்போது, ‘‘பொது சொத்துகளை சேதப்படுத்தியவர் கள் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். ஆம்பூர் வன்முறை தொடர்பாக பலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகி றது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர் கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.

ஆம்பூரில் நிலைமை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வன்முறை சம்பத்தால் 38 போலீஸார் உட்பட 50 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரூ.17 லட்சம் மதிப்பிலான பொது சொத்துகள் சேதமடைந்துள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.

இதைத் தொடர்ந்து 112 பேர் மீது நேற்று மாலை வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தெரிய வந்தது.

இதற்கிடையே, ஆய்வாளர் மார்டீன் பிரேம்ராஜை சஸ்பெண்ட் செய்து டிஜிபி அசோக்குமார் நேற்று மாலை உத்தரவிட்டார். காவலர்கள் சபாரத்தினம், நாகராஜ், முரளி, சுரேஷ், அய்யப்பன் மற்றும் முனியப்பன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்