மழலையர் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் மழலையர் பள்ளிகள், மழலையர் முன்பருவப் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதற்கான வழி காட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த கே.பாலசுப்பிரமணியம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறை சட்டம் 1973-ன்படி உரிய அங்கீகாரம் பெறாமல் செயல்படும் 760 மழலையர் பள்ளிகளை மூடுவதற்கும், அங்கு படிக்கும் மழலையர்களை அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டிருந்தது.

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து, தமிழகத்தில் உள்ள மழலையர் பள்ளிகளைப் பற்றிய விவரங்கள் மற்றும் அதுதொடர்பான சுற்றறிக்கைகளை தனது இணைய தளத்தில் வெளியிட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவிட்டது. கடந்த ஏப்ரல் 1-ம் தேதி இவ்வழக்கு மீண்டும் விசார ணைக்கு வந்தபோது, மழலையர் பள்ளிகள் தொடர்பான விவரங் களை பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிடுவ தற்கு மேலும் 6 வாரம் கால அவகாசம் வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் கேட்டார். அதற்கு 2 வாரம் மட்டும் அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, மழலையர் பள்ளி பற்றிய விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தனது இணையதளத்தில் அண்மையில் வெளியிட்டது.

இந்த நிலையில், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகி யோர் கொண்ட அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மழலையர் பள்ளிகளுக்கான வரைவு விதி முறைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்டன. இதையடுத்து, மழலை யர் பள்ளிகள் மற்றும் மழலையர் முன்பருவப் பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் விதிமுறைகளை ஜூலை 22-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூலை 30-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்