காஞ்சிபுரம், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்துக்குட்பட்ட அரசு உதவி பெறும் இரு தனியார் பள்ளிகள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காட்டுவதற்காக 9-ம் வகுப்பில் குறைந்த மதிப் பெண்கள் பெற்ற மாணவர்களை வெளியேற்றியது தெரிய வந்துள் ளது.
செங்கல்பட்டு கல்வி மாவட்டத் தில் உள்ள அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகள் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சி காட்டுவதற்காக 9-ம் வகுப்பில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாண வர்களை வலுகட்டயமாக பள்ளியி லிருந்து வெளியேற்றி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியர் சண்முகத்திடம் புகார் அளித்தனர்.
இதை தொடர்ந்து காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்தில், அரசு நிதியுதவியுடன் செயல்படும் தனியார் பள்ளிகளில் ஆய்வு நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். இதன்படி, பள்ளி வாரியாக கணக்கெடுக்கும் பணியில் கல்வித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இதில், செங்கல்பட்டு கல்வி மாவட்டத்தில் அனைத்து விதமான தனியார் பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பைச் சேர்ந்த 56 மாணவர்கள் பல்வேறு காரணங்களுக்காக பெற் றோர்களின் விருப்பத்தின் பேரி லேயே மாணவர்களை வெளி யேற்றியிருப்பது தெரியவந்துள்ள தாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர் உஷா ‘தி இந்து’விடம் கூறிய தாவது: மாவட்ட ஆட்சியர் உத்தர வின்பேரில், அரசு மற்றும் அனைத்து விதமான தனியார் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி, தோல்வி குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை தயாரிக்கப்பட் டுள்ளது. இந்த அறிக்கையை, நாளை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளோம்.
மேலும், தனியார் பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, பள்ளியிலி ருந்து வெளியேற்றப்பட்ட 9-ம் வகுப்பு மாணவர்கள் குறித்து விசா ரிக்கப்பட்டது. இதில், மாணவர் களது பெற்றோர்களின் விருப்பத் தின் பேரிலேயே வெளியேற்றப் பட்டுள்ளதாகவும் அதற்கான எழுத்துபூர்வமான சான்றிதழ்களை தனியார் பள்ளி நிர்வாகங்கள் அளித்துள்ளன.
எனினும், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய கல்வி மாவட் டங்களில் தலா ஒரு பள்ளியில் மேற்கூறிய முறையில் 7 மாண வர்கள் வெளியேற்றப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இருப்பினும் முறையான விசாரணையின்பேரில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, பெற்றோர்கள் கருத்து தெரிவிக்கும்போது, ‘பிள்ளைகளின் கல்வி எதிர்காலம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, தனியார் பள்ளிகள் கூறும் ஆவணங் களில் கையெழுத்திடும் நிலைக்கு தள்ளப்படுகிறோம். இதிலும், கல்வி அறிவில்லாத பெற்றோர்களின் நிலை மிகவும் கவலைக்குரியது. ஐந்து அல்லது நான்கு ஆண்டுகள் வரை அதே பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள் 9-ம் வகுப்பில் மட்டும் ஏன் வெளியேற வேண்டும். அதனால், தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறினர்.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சி யரிடம் கேட்டபோது, ‘மாவட்ட கல்வி நிர்வாகம், அறிக்கை தாக்கல் செய்த பின்னரே முழு விவரங்கள் தெரியவரும். அதன்பின்னர், கல்வித்துறை மற்றும் பெற்றோர்களிடம் விசாரித்து தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
41 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago