தமிழகத்தில் காற்றாலைகளில் 3 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி

காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இது, தமிழகத் தின் மின் தேவையை சமாளிக்க உதவுகிறது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் 12,764 மெகாவாட்டாக இருந்த உச்சபட்ச மின் தேவை, 2014-15ல் 13,775 மெகா வாட்டாக உயர்ந்துள்ளது. மின்நுகர் வும் 281.20 மில்லியன் யூனிட்டில் இருந்து 293.969 மில்லியன் யூனிட்டாக அதிகரித்துள்ளது.

அதேநேரத்தில், தேவைக் கேற்ப மின் உற்பத்தித் திறனும் 11,884.44 மெகாவாட்டில் இருந்து 13,366 மெகாவாட்டாக உயர்த்தப் பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை 40 சதவீதத்துக்கும் அதிக மான மின்சாரம் அனல் மின்நிலை யங்களில் இருந்து கிடைக்கிறது. ஆனால், ஜூன் முதல் அக்டோபர் வரையில் அதிகப்படியான மின் சாரம் காற்றாலைகளில் இருந்து பெறப்படுகிறது. காற்றாலைகளில் இருந்து கிடைக்கும் மின்சாரம் தற் போது தமிழகத்தின் மின் தேவையை சமாளிக்க உதவி வருகிறது.

கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தமிழகத்தில் உள்ள வல்லூர், வடசென்னை அனல் மின் நிலையங்களில் அடிக்கடி கொதி கலன் குழாய் வெடிப்பு, தொழில் நுட்ப கோளாறு காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் சில நேரங்களில் அறிவிக் கப்படாத மின் தடை நிலவியது.

இந்நிலையில், சமீபத்தில் மின் உற்பத்தி அதிகரித்ததால் தொழிற் சாலைகளுக்கான மின் கட்டுப்பாடு முற்றிலும் நீக்கப்பட்டது. தற் போது காற்றாலைகளில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், ஒட்டுமொத்த உற்பத்தி 13 ஆயிரம் மெகாவாட்டை கடந்துள்ளது. கடந்த 12-ம் தேதி அதிகபட்சமாக 13,112 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது இதில், அனல்மின் நிலையங்களில் இருந்து 3,040, மத்திய தொகுப்பில் இருந்து 4,005, காற்றாலைகளில் இருந்து 1,849 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது.

நேற்று முன்தினம் காற்றாலை களில் இருந்து அதிகபட்சமாக 3,005 மெகாவாட்டும்,மத்திய தொகுப் பில் இருந்து 3,424 மெகாவாட்டும் கிடைத்துள்ளது. காற்றாலை மின்சாரம் அதிகரித்துள்ளதால் மேட்டூர், தூத்துக்குடி அனல் மின் நிலையங்களில் உற்பத்தியை நிறுத்தி, பராமரிப்பு பணிகளை மின்வாரியம் தொடங்கியுள்ளது.

ஆனால், வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி தொடர்ந்து நடந்து வருகிறது. காற்றாலை கைகொடுப்பதால் மின் தடை இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்