சவுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவரின் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா கடிதம்

சவுதி அரேபிய கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப் பட்ட கன்னியாகுமரி மாவட்ட மீனவர் மதிவளனின் உடலை விரைந்து தமிழகத்துக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்ப தாவது:

கன்னியாகுமரி மாவட்டம் பொழிக்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலுவை என்பவரின் மகன் எஸ்.மதிவளன் (45), சவுதி அரேபியாவில் தனியார் நிறுவனத் தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்துள்ளார். அரேபிய ஆழ்கடல் பகுதியில் 7 பேருடன் மீன்பிடித்துக் கொண் டிருந்தபோது அடையாளம் தெரி யாத நபர்களால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சவுதி அரேபிய கடல் பகுதி யான ஜுபையில் என்ற இடத்தில் இருந்து மே 29-ம் தேதி காலை முகமது முபாரக் பகுத் என்பவருக்குச் சொந்தமான படகில் ஆழ்கடலுக்கு சென்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோதுதான் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. அவருடன் சென்ற 7 பேரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். சுட்டுக் கொல் லப்பட்ட மீனவர் மதிவளனின் உடல் சவுதி அரேபியாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.

ஏழ்மை நிலையில் உள்ள தங்களது குடும்பத்தைக் காப் பாற்றுவதற்காக பிழைப்புக்காக ஏழை மற்றும் அப்பாவி மீனவர்கள் ஒப்பந்த அடிப் படையில் வேலை செய்ய அரேபி யாவுக்கு சென்றுள்ளனர். மீனவர் மதிவளனின் இழப்பால் அவரது குடும்பம் நிலைகுலைந்து போயி ருக்கிறது. மதிவளனின் உடலை சவுதியில் இருந்து தமிழகத்துக்கு கொண்டுவர முடியாத நிலையில் அவரது குடும்பம் உள்ளது.

எனவே, சவுதியின் ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தாங்கள் நேரடியாகத் தொடர்பு கொண்டு, மீனவர் மதிவளனின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அவர் பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து இறுதி பணப் பயன்களையும் தாமதமின்றி பெற்றுத்தருமாறு தூதரக அதிகாரிகளுக்கு தாங்கள் அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

ரூ.5 லட்சம் நிவாரணம்

இதற்கிடையே, சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “சவுதியில் நடந்த துயர சம்பவத்தில் அகால மரணமடைந்த மீனவர் மதிவளனின் குடும்பத்துக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மதிவளனின் உடலை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரவும், அவர் பணிபுரிந்த நிறுவனத்திடம் இருந்து அவரது குடும்பத்துக்கு இறுதிப் பணப்பயன்களை பெற்றுத் தரவும் இந்திய தூதரகத்தின் மூலமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் பிரதமரை கேட்டுக் கொண்டுள்ளேன். மதிவளனின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்