பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் 20 இடங்களில் ஐஜேகே போட்டி: பாரிவேந்தர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் 20 தொகுதிகளில் இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே) போட்டியிடும் என அந்த கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

கோவையில் அக்கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பாரிவேந்தர் கூறியதாவது:

ஆர்.கே.நகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் அங்கு வளர்ச்சித் திட்டப் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.

தேர்தலையொட்டி, ஆளும் கட்சியினர் சார்பில் வாக்குக்கு பணம் கொடுப்பதும் நடந்து வருகிறது. அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் அனைவரும் இடைத்தேர்தல் தொகுதியில் முகாமிட்டுள்ளதால் சட்டப் பேரவை, தலைமைச் செயலக அலுவலக பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. அமைச்சர் கள் பணி செய்யாததால் அதிகாரி களும் அவ்வாறே உள்ளனர்.

வரும் தேர்தலில் திமுக அல்லது அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்க முயன்றால், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து நாங்கள் வெளியேறுவோம்.

கடந்த பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் ஐஜேகே 17 இடங்களில் போட்டியிட்டது. அந்த தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சியைக் காட்டிலும் நல்ல வாக்குகளைப் பெற்றது. எனவே, தற்போது நடைபெற உள்ள பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் 20 இடங்களில் போட்டியிட முடிவெடுத்துள்ளோம் என்றார்.

இன்றுமுதல் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் விடுமுறையே இல்லாமல் மதுக்கடைகள் செயல் படுகின்றன. மதுக்கடைகள் இல் லாத தெருக்களே இல்லை என்ற நிலை தமிழகத்தில் உருவாகி விடும். கொலை, கொள்ளை, பாலியல் வன்முறை, திருட்டு, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்கள் அதிகளவில் நடக்க மதுவே காரணம்.

எனவே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி, இந்திய ஜனநாயகக் கட்சியின் அமைப்பு ரீதியான 70 மாவட்ட தலைநகரங்களிலும் ஜூன் 12 (இன்று) முதல் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்