ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: தேமுதிக தொடர்ந்து மவுனம், குழப்பத்தில் பாரதிய ஜனதா கட்சி

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக தேமுதிக தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. இதனால் கூட்டணிக் கட்சியான பாஜக குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கவுள்ளது. அந்த தொகுதியில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா போட்டியிடவுள்ளார். அதற்காக அவர் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டார். அவரை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் மட்டுமே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. சமூக ஆர்வலர்கள் டிராஃபிக் ராமசாமி, சசிபெருமாள், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவரும், தமிழ் மாநில கட்சியின் தலைவருமான பால் கனகராஜ் ஆகியோரும் இந்த தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

திமுக, காங்கிரஸ், மதிமுக, பாமக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. ஆரம்பத்தில் இந்த தேர்தலில் பாஜக போட்டியிட நினைத்தது. அதற்காக கூட்டணியிலுள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்துடன் பாஜக தலைவர்கள் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். இந்த பேச்சு வார்த்தைக்கு பிறகு தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனால் போட்டியிடுவது குறித்து எதுவும் அறிவிக்கப்படவில்லை.

பாஜக மாநிலத் தலைவர் தமி ழிசை சவுந்தரராஜன் மற்றும் அமைப் புச் செயலாளர் மோகன்ராஜுலு ஆகியோர் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டுக்கு நேற்று நேரில் சென்றனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அவர்கள் ஆர்.கே.நகர் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்