முன்னாள் அமைச்சரின் மனைவி தற்கொலை முயற்சி

By செய்திப்பிரிவு

திருச்சியில் உள்ள மாவட்ட நலப் பணி நிதிக்குழுவுக்குச் சொந்த மான கலையரங்கம் திரையரங் கத்தைப் பூட்டி சீல் வைத்ததைக் கண்டித்து, அந்த திரையரங்கத்தை குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்த கஸ்தூரி என்கிற ஆமினா பீ தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட் டுள்ளது.

கலையரங்கம் திரையரங்கை நடத்துவதற்குத் தேவையான சி ஃபார்ம் இல்லை எனக்கூறி மாவட்ட நிர்வாகம், நேற்று முன்தினம் திரையரங்கத்தைப் பூட்டி சீல் வைத்தது. இந்த திரையரங்கத்தை 5 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தனது தந்தை பாலசுப்பிரமணியனின் பெயரில் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சையின் மனைவி கஸ்தூரி என்கிற ஆமினா பீ நடத்திவந்தார்.

குத்தகை பாக்கி மற்றும் திரையரங்கம் நடத்துவதற்குத் தேவையான சி ஃபார்ம் பெறாதது ஆகிய காரணங்களைக் காட்டி இந்த திரையரங்கம் ஏற்கெனவே கடந்த மார்ச் மாதம் 19-ம் தேதி பூட்டி சீல் வைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற மதுரை கிளையை அணுகி திரையரங்கை நடத்த இடைக்கால உத்தரவு பெற்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் திரையரங்கம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. இதைக் கண்டித்து கஸ்தூரி நேற்று காலை திரையரங்க வளாகம் முன்பு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட் டுள்ளார்.

தற்கொலை முடிவுக்கு காரணமானவர்கள் என சிலரது பெயர்களை அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். விஷம் குடிக்க முயன்ற அவரை உடனிருந்த வர்கள் தடுத்து, தற்கொலை முயற்சியிலிருந்து மீட்டனர்.

செய்தியாளர்களிடம் விளக்கம்

இதுகுறித்து கஸ்தூரி செய்தி யாளர்களிடம் கூறும்போது, “நீதி மன்றம் தெரிவித்தபடி குத்தகைத் தொகைக்கான வரைவோ லையைக் கொடுத்தால் மாவட்ட நலப்பணி நிதிக்குழுவினர் அதை வாங்க மறுக்கின்றனர். இதனால் திரையரங்கத்தை திறந்து தொடர்ந்து நடத்த முடிய வில்லை. இதன்மூலம் சமு தாயத்தில் எனக்கிருந்த நற் பெயருக்கு களங்கமேற்படுத்தி விட்டனர். எனவேதான் தற் கொலை செய்துகொள்ள முயன் றேன்.

பேச்சுவார்த்தைக்கு வருமாறு மாவட்ட வருவாய் அலுவலர் அழைத்தார். இவ்வளவு நடந்த பிறகு நான் அவர்களிடம் போய் பேசுவதற்கு என்ன இருக்கிறது. இனி சட்டப்படி சந்திக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன்” என்றார்.

இந்தநிலையில் மன உளைச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திருச்சி கன்டோன்மென்ட் பகுதி யில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக கஸ்தூரி அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எம்.பி. விளக்கம்

இந்த விவகாரத்தில் திருச்சி மக்களவை தொகுதி அதிமுக உறுப்பினர் குமாருக்கு தொடர் பிருப்பதாக சில ஊடங்கங்கள் தகவல் வெளியிட்டன.

இதை கடுமையாக மறுத்துள்ள அவர், “இதுபோன்ற தவறான தகவல்களைப் பரப்பி என் நற்பெயருக்கு களங்கமேற்படுத்த நினைக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று நேற்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்