உண்டு உறைவிடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னையில் இரண்டு உண்டு உறை விடப் பள்ளிகள் ஜூலை மாதத்தில் தொடங்கும் என்று மாநகராட்சி அறிவித் துள்ளது.

சென்னையில் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கும் என்று கடந்த ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட் டிருந்தது. அதன்படி உண்டு உறைவிடப் பள்ளிகளாக மேம்படுத்த நான்கு மாநகராட்சிப் பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அவற்றில் இரண்டு பள்ளிகளில் முதல் கட்டமாக கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளன.

இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிந்த பிறகு, ஜூலை மாதத் தில் சைதாப்பேட்டை பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், அமைந்த கரையில் சுப்பராயன் தெருவில் உள்ள மேல்நிலைப் பள்ளியிலும் உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. இரண்டு பள்ளிகளிலும் தலா 60 மாணவர்கள் தங்குவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளன. அவர்களுக்கு காலையிலும் இரவிலும் இங்கேயே உணவு வழங்கப்படும். மத்திய உணவு பள்ளியில் வழங்கப்படும்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி கூறும்போது, “கட்டுமான பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களும் வாங்கப்பட்டு விட்டன. அடுத்த மாதத்தில் இவை திறக்கப்படும். சிறப்பு பயிற்சி வழங்க நல்ல மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள், தொலைவிலிருந்து வரும் மாணவர்கள் இங்கு தங்கிப் படிக்க கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவார்கள்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்