ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை

சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் குறித்த புகாரை பொதுமக்கள் இங்கு தெரிவிக்கலாம்.

இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் விக்ரம் கபூர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் வரும் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மே மாதம் 26-ம் தேதி முதல் ஜூலை 2-ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க ரிப்பன் மாளிகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப் பட்டுள்ளது. பொதுமக்கள் தங்கள் புகாரை கட்டணமில்லா தொலைபேசி எண். 1800- 4257012 ல் தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1950 என்ற எண்ணிலும் பொதுமக்கள் தங்கள் புகாரை பதிவு செய்யலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் தேர்தல் செலவினங்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 84 பறக்கும் படைகள், 6 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வீடியோ கண்காணிப்புக் குழு ஆகியவைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தேர்தல் நடத்தை விதிகள் சம்பந்தமாகவும், அனுமதிக்கப்பட்ட செலவின தொகை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்