பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது பைக் ஏறியதில் 3 பேர் பலி: ஒரே பைக்கில் 3 இளைஞர்கள் வேகமாக சென்றதால் விபத்து

By செய்திப்பிரிவு

பாரிமுனையில் பிளாட்பாரத்தில் தூங்கியவர்கள் மீது பைக் ஏறியதில் 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

சென்னை பாரிமுனையில் பூ வியாபாரம் செய்பவர்கள் சின்ன பொண்ணு (60), சகுந்தலா (70), அப்பு (24). பல ஆண்டுகளாக இதே பகுதியில் பூ விற்பனை செய்து நடைபாதையிலேயே வாழ்ந்து வந்தனர். இந்த பிளாட்பாரத்தில் வசித்த பலருக்கு துரைப்பாக்கம் கண்ணகி நகரில் அரசு சார்பில் வீடுகள் கொடுக்கப்பட்டன. ஆனால் இவர்களுக்கு கொடுக்கப்படவில்லை. நேற்று முன்தினம் இரவில் பூ விற்று முடித்துவிட்டு வழக்கமாக தூங்கும் இடமான, பாரிமுனை பஸ் நிலையத்துக்கு வெளியே என்.எஸ்.சி.போஸ் சாலையில் எம்எல்ஏ அலுவலகத்தின் முன்பகுதியில் பிளாட்பாரத்தில் படுத்து தூங்கினர். இவர்களுடன் மேலும் சிலரும் தூங்கினர்.

அதிகாலை 3 மணியளவில் ஒரே பைக்கில் 3 பேர் அதிவேகமாக வந்தனர். திடீரென அந்த பைக் பிளாட்பாரம் மீது ஏறி, அங்கே தூங்கிக் கொண்டிருந்தவர்களின் மீது ஏறி இறங்கியது. என்ன நடந்தது என்பதே தெரியாமல் வலியால் அவர்கள் அலறி துடித்தனர். பின்னர் அந்த பைக் அருகே இருந்த சுவரில் மோதி கவிழ, அதிலிருந்த 3 பேரும் கீழே விழுந்து அடிபட்டு மயங்கும் நிலைக்கு சென்றனர்.

சத்தம் கேட்டு அருகே தூங்கிக் கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் எழுந்து பார்த்தபோது, சின்ன பொண்ணு, சகுந்தலா, அப்பு ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்து கிடப்பது தெரிந்தது. சின்ன பொண்ணுவின் தலை நசுங்கிய நிலையிலும், சகுந்தலா மற்றும் அப்பு ஆகியோர் மார்பு எலும்புகள் உடைந்தும் இறந்து கிடந்தனர். மேலும், செல்வி என்ற பெண் உட்பட இருவர் பைக் ஏறியதில் காலில் காயம் அடைந்தனர்.

பூக்கடை போக்குவரத்து போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். பைக்கில் வந்த 3 இளைஞர்களும் காயம்பட்டு வலியில் துடிக்க அவர்களை மீட்டு, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த 3 பேரின் உடல்களும் பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

அதிவேகமே காரணம்

பைக்கை ஓட்டிவந்த சாதிக்(18), பெரோஸ் (17), மன்சூர் (17) ஆகிய 3 பேரும் ஐஸ்ஹவுஸ் பகுதியை சேர்ந்தவர்கள். இரவில் கடற்கரைக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் நள்ளிரவில் கடற்கரைக்கு சென்றுவிட்டு மீண்டும் திரும்பி வந்தபோது விபத்து நடந்துள்ளது. சாதிக், பைக்கை சுமார் 90 கி.மீ. வேகத்தில் ஓட்டியதாக போலீஸார் தெரிவித்தனர்.

கொலை வழக்கு

வழக்கமாக விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டால் 304(ஏ) பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இதில் எளிதில் ஜாமீனும் கிடைத்துவிடும். ஆனால் அதிவேகமாக சென்றால் விபத்து ஏற்படும் என்பது தெரிந்தே வாகனத்தை ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தி இருப்பதால் 304(2) பிரிவின் கீழ் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கொலை வழக்குக்கு சமமான பிரிவாகும். எளிதில் ஜாமீனும் கிடைக்காது. சிகிச்சை பெற்று வரும் சாதிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். பெரோஸ், மன்சூர் ஆகியோரின் முகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இறந்தவர்கள் விவரம்

விபத்தில் இறந்த சின்ன பொண்ணுவுக்கு செல்வி, அமுதா என இரு மகள்களும், கணேசன் என்ற மகனும் உள்ளனர். சகுந்தலாவுக்கு குரு(40), தாஸ்(35) என இரு மகன்களும், கவிதா என்ற மகளும் உள்ளனர். இளைஞர் அப்புவின் தந்தை கண்ணாயிரம் ஏற்கெனவே இறந்துவிட்டார். அம்மா கலா, அக்கா ஆனந்தி, தங்கை நதியா ஆகியோர் உள்ளனர்.

விபத்தில் இறந்த 3 பேரின் குடும்ப உறுப்பினர்களில் சிலருக்கு கண்ணகி நகரில் வீடுகள் உள்ளன. இதனால் 3 பேரும் வியாபாரம் முடிந்து இரவில் சில நாட்கள் கண்ணகி நகருக்கு சென்றுவிடுவார்கள். பல நாட்கள் நடைபாதையில் தங்குவார்கள். “நேற்று வீட்டுக்கு வந்திருந்தால் உயிர் பிழைத்திருப்பாயே” என உறவினர்கள் கூறி கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்