மாநகராட்சி பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. சேர்க்கை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை அதிகரித் துள்ளது.

கடந்த கல்வியாண்டு இறுதியில் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் 5,424 பேர் இருந் தனர். இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் வாரம் வரை 6,084 பேர் சேர்ந்துள்ளனர். இன்னமும் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று மாநகராட்சி எதிர்பார்க்கிறது.

சென்னையில் உள்ள 284 மாநக ராட்சிப் பள்ளிகளில், 175 பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்த வசதியுள்ளது. ஆனால் மாணவர் சேர்க்கை இல்லாததாலும், மாணவர் சேர்க்கை மிகவும் குறை வாக இருப்பதாலும் இவற்றுள் ஒரு சில பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இல்லை.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி தெரிவிக்கும் போது, “கடந்த கல்வியாண்டு தொடக்கத்தில் 3,500 மாணவர்கள் மட்டுமே சேர்ந்திருந்தனர். ஆனால், இந்த ஆண்டு இப்போதே எல்.கே.ஜி.யில் 2,918 மாணவர்களும் யு.கே.ஜி.யில் 3,166 மாணவர்களும் சேர்ந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 8 ஆயிரமாக உயரும் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஆண்டு 65 பள்ளிகளில் தான் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் இருந்தன. இந்த ஆண்டு 175 பள்ளிகளில் வகுப்புகள் உள்ளன. மாணவர் சேர்க்கை அதிகரிப்பதற்கு இது முக்கிய காரணமாகும்” என்றார்.

மகாகவி பாரதி நகர், ஜெ.ஜெ.நகர், ஹரிநாராயணபுரம், பீட்டர்ஸ் சாலை ஆகிய இடங்களில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 5-க்கும் குறைவாக உள்ளது. இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயராவிட்டால் அருகில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்