அரசு சட்டக் கல்லூரிகளில் எல்எல்பி மாணவர் சேர்க்கை தடை ஜூலை 2 வரை நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி மாணவர் சேர்க்கைக்கு விதிக்கப்பட்ட தடையை ஜூலை 2-ம் தேதி வரை நீட்டித்து உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட அரசு சட்டக் கல்லூரிகளில், நடப்பு கல்வியாண்டில் 3 ஆண்டுகள் எல்எல்பி படிப்பில் சேர, அனைத்து சமூகத்தினருக்கும் வயது வரம்பை நீக்கி 4.6.2015-ல் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பையும், சட்டப்படிப்பில் சேர்வதற்கான வயது வரம்பை நீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் 28.9.2013-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யவும், அவற்றுக்கு தடை விதிக்கவும் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனு ஜூன் 18-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வயது வரம்பை நீக்கி பார் கவுன்சில் 28.9.2013-ல் பிறப்பித்த உத்தரவுக்கும், அரசு சட்டக் கல்லூரிகளில் 3 ஆண்டு எல்எல்பி. படிப்பிலும், சென்னை சிறப்பு சட்டப் பள்ளியில் 3 ஆண்டு எல்எல்பி (ஹானர்ஸ்) படிப்பிலும் மாணவர் களை சேர்க்க தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் கொண்ட அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தடையை விலக்கக்கோரி தமிழக சட்டத்துறை துணைச் செயலர் எஸ். ஜார்ஜ் அலெக்ஸாண்டர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில், சட்டப்படிப்பில் சேர வயது வரம்பு நிர்ணயம் செய்வது பார் கவுன்சிலின் முடிவு. இதற்கும் சட்டத் துறைக்கும் தொடர்பு இல்லை. எனவே, தடையை நீக்க வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் செயலர் தட்சிணாமூர்த்தி சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சட்டக்கல்வியை பொருத்தவரை இந்திய பார் கவுன்சிலுக்குதான் முழு அதிகாரம் உண்டு. மாநில பார் கவுன்சிலுக்கு பங்கு இல்லை. சட்டப்படிப்பு முடித்தவர்களின் பின்னணியை ஆராயாமல் பார் கவுன்சில் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அனைவரையும் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின் றனர் என்பதும், குற்றப் பின்னணி உள்ளவர்களையும் வழக்கறிஞர் களாக பதிவு செய்கின்றனர் என்ப தும் தவறு. பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர்களாக இருப்பவர் களில் ஒழுங்கீனமாக நடந்து கொள்பவர்கள், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் தண்டிக்கப்பட்ட வர்கள் 2 ஆண்டுக்கு தகுதி இழப்பு செய்யப்படுகின்றனர் எனக் கூறப் பட்டிருந்தது. இதையடுத்து, 3 ஆண்டு எல்.எல்.பி படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கு விதிக் கப்பட்ட தடையை ஜூலை 2-ம் தேதி வரை நீட்டித்து, அன்று இந்திய பார் கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்