காவிரி நீர்ப் பிரச்சினை: முதல்வர் தலைமையிலான குழு பிரதமரைச் சந்திக்க வேண்டும் - கி.வீரமணி வலியுறுத்தல்

காவிரி நீர்ப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகளை சமாளிக்க தமிழக முதல்வர் தலைமையிலான குழு பிரதமரைச் சந்தித்துப் பேச வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: தமிழ்நாட்டின் வாழ் வாதாரப் பிரச்சினையாக காவிரி நீர்ப்பிரச்சினை உள்ளது. இப் பிரச்சினையால் காவிரி டெல்டா பகுதி விவசாயம் பெரிதும் பாதிப்படைகிறது. கர்நாடகத்தி லிருந்து கழிவுப் பொருட்கள் கலந்த நீராக காவிரி நீர் வரு கிறது. இந்த நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருட்களின் தன்மை அதிகம் இருப்பதாக தென்மண் டல பசுமைத் தீர்ப்பாயத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.

மேலும்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தமிழக அரசு உடனடி யாக அனைத்துக் கட்சியினரை யும் அழைத்து, எம்.பி.க்களோடு இணைத்து, முதல்வர் தலைமையில் தூதுக்குழுவாக சென்று பிரதமரைச் சந்தித்துப் பேச வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்