சொத்துகள் முடக்கத்துக்கு எதிரான சன் டிவி மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.742.54 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத்துறை பிறப் பித்த உத்தரவுக்கு எதிராக சன் தொலைக்காட்சி நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இந்தியாவில் தனக்கு சொந்தமான ஏர்செல் தொலைத் தொடர்பு நிறுவனப் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்க கடந்த 2006-ம் ஆண்டு மத்திய தொலைத் தொடர்பு அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வெளிநாடு வாழ் இந்தியர் சிவசங்கரன் சிபிஐ-யிடம் 2011-ல் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தில் சட்டவிரோதமாக கோடிக்கணக்கான பணப் பரிவர்த் தனை நடந்துள்ளதால், அமலாக் கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.

அதன் தொடர்ச்சியாக சன் டிவி நிறுவனத்தின் ரூ.742.54 கோடி சொத்துகளை முடக்கி மத்திய அமலாக்கத் துறை கடந்த மார்ச் 31-ம் தேதி உத்தரவிட்டது. இதை எதிர்த்து சன் டிவி நெட்வொர்க், கல் கம்யூனிகேஷன் நிறுவன அதிகாரிகள் எம்.ஜோதிபாசு விட்டல், சம்பத் குமரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் இருதரப்பு வாதங் களை கேட்ட நீதிபதி எம்.சத்திய நாராயணன் பிறப்பித்த உத்தரவு:

ஏர்செல்-மேக்ஸிஸ் தொடர்பான வழக்கு விசாரணை, சிபிஐ வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் சிபிஐ விசாரணையை முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டது.

சில நிறுவனங்கள், தனி நபர்கள் மற்றும் அடையாளம் தெரியாத அதிகாரிகள் ஆகியோர் மீது அமலாக்கத்துறை தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. அந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றம், வேறு எந்த நீதிமன்றமும் இவ்வழக்கில் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது. எனவே, இவ்வழக்கை ஊக்கு விக்க இந்த நீதிமன்றம் விரும்ப வில்லை. மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் வேறு எந்த நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக் கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

23 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்