ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை: வரிசையில் காத்திருக்க வைக்கக் கூடாது என உத்தரவு

By செய்திப்பிரிவு

ரேஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிளை வரிசையில் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி அனுப்ப வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது பருப்பு, சர்க்கரை, உளுந்து மற்றும் மண்ணெண்ணெய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகப் புகார் எழுந்துள்ளது. அதனால் கடைகளில் முதலில் முந்துவோருக்கு மட்டுமே முக்கியப் பொருட்கள் கிடைக்கின்றன. அதனால், ரேஷன் கடைகளை திறப்பதற்கு முன்னரே, மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலும், வாடகைக் கட்டிடங்களில்தான் ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்தக் கடைகளில் நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் மழை, வெயில் காலங்களில் திறந்த வெளியில் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை நீடிக்கிறது. இதனால், மாற்றுத் திறனாளிகள் கடும் அவதியடை கின்றனர். அவர்களுக்கு பொது மக்களும், ரேஷன் கடை ஊழியர்களும் முன்னுரிமை அளிப்பதில்லை. ஆனால், ரயில் நிலையம், அரசு பஸ்கள், அரசு அலுவலகங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சமீபத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைச் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, ரேஷன் கடைகளில் மாற்றுத்திறனாளி களை வரிசையில் காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் பொருட்களை வழங்க தமிழ்நாடு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உத்தரவிட் டுள்ளது. இந்த உத்தரவு நகலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கள், அனைத்து வட்ட வழங்கல் அலு வலர்களுக்கும் அனுப்பி உள்ளனர்.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட வழங்கல் அலுவலர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, ரேஷன் கடைகளில் மாற்றுத் திறனாளிகளை வரிசையில் நிற்கும் படி ஊழியர்கள் அலைக்கழிப்ப தாக பரவலாக புகார் எழுந்தது. எனவே, அனைத்து ரேஷன் கடை களிலும் மாற்றுத்திறனாளிகளை காத்திருக்க வைக்காமல் உடனே பொருட்களை வழங்கி அனுப்பும்படி ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்