மத நல்லிணக்கத்தை கெடுக்க வெறுப்பூட்டும் பேச்சுக்களா? - ஸ்டாலின்

By செய்திப்பிரிவு

மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் எழுதியுள்ள ஃபேஸ்புக் பதிவில், ''பாஜக தலைவர் அமித்ஷா மதுரைக்கு வருகின்ற நேரத்தில், மாநிலத்தில் நிலவும் மத நல்லிணக்கத்திற்கு பாதகம் ஏற்படுத்தும் முயற்சியில் எச் ராஜா போன்றவர்கள் பேசுவது கண்டனத்திற்குரியது.

"பள்ளியில் தேர்வு எழுதும் நேரங்களில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணிந்து செல்ல தடை விதிக்க வேண்டும்" என்று அவர் பேசியிருப்பது சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாதது.

மதசார்பற்ற நாட்டில் பர்தா அணிந்து கொள்வது என்பது இஸ்லாமிய சமுதாயப் பெண்கள் ஒவ்வொருவருக்கும் உள்ள சுதந்திரம் மட்டுமல்ல அவர்களின் உரிமையுமாகும் என்பதை மனதில் வைத்து இது போன்ற வெறுப்பூட்டும் பேச்சுக்களை தவிர்க்குமாறு கேட்டு கொள்கிறேன்.

மத நல்லிணக்கம் பேணும் தமிழகத்தில் அமைதிக்கு எந்த பங்கமும் வந்து விடாமல் எச்சரிக்கையாக இருப்பது அரசியல் கட்சிகளின் கடமை என்பதை உணர வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்