புதுக்கோட்டை ஆவின் நிலையத்தில் விறகு அடுப்புடன்கூடிய கொதிகலன் அறிமுகம்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் முதல்முறையாக புதுக்கோட்டை ஆவின் நிலை யத்தில் விறகு அடுப்புடன் கூடிய கொதிகலன் பொருத்தப் பட்டுள்ளது.

புதுக்கோட்டை திருக்கோ கர்ணத்தில் உள்ள ஆவின் நிலை யத்தில் சுமார் ரூ.4 கோடியில் பாலைக் காய்ச்சுதல், குளிரூட்டு தல், பதப்படுத்துதல், தரம் பிரித்தல், பரிசோதித்தல், பாக் கெட் தயாரித்தல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வசதிகளால் மாவட்டத்தில் கிராம பால் கூட்டுறவுச் சங்கங் களின் எண்ணிக்கை 147-ல் இருந்து 263 ஆகவும், பால் கொள் முதல் நாளொன்றுக்கு 17 ஆயிரம் லிட்டரிலிருந்து 44 ஆயிரம் லிட்டராகவும் உயர்ந்துள்ளது.

மேலும், நெய், பால்கோவா, பாதாம் மிக்ஸ் உள்ளிட்ட பொருட் கள் தயாரிக்கவும், பால் விற் பனையை அதிகரிக்கவும் நிலை யத்தில் தற்போதுள்ள டீசல் மூலம் இயங்கும் கொதிகலனுக்குப் பதிலாக, ரூ.35 லட்சத்தில் விறகு அடுப்புடன்கூடிய புதிய கொதி கலன் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் குறைந்த நேரத்தில், குறைந்த செலவில் அதிக அளவு பாலை கொதிக்க வைக்கலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து ஆவின் நிலை யத்தினர் கூறும்போது, “தற் போதுள்ள ஆயில் கொதிகலனில் 1 லிட்டர் பாலை கொதிக்க வைக்க 35 பைசா செலவாகிறது. இதை விறகு அடுப்பில் கொதிக்க வைக்க 10 பைசா மட்டுமே செலவாகும்.

தமிழகத்தில் முதன்முறையாக பொருத்தப்பட்டுள்ள இந்த விறகு அடுப்புடன்கூடிய கொதிகலன் அடுத்த வாரத்தில் இருந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

தமிழகம்

20 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்