பார்வையற்ற முதல் பெண் ஐஎப்எஸ் அதிகாரி படித்த பள்ளிக்கு சென்று உருக்கம்: ஆசிரியர்களை நன்றியோடு நினைவுகூர்ந்தார்

இந்திய வெளியுறவுப் பணிக்கு முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பார்வையற்ற மாற்றுத் திறன் பெண் பெனோ ஷெபைன், தான் படித்த சிறுமலர் பள்ளிக்கு சென்று ஆசிரியர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த பார்வை யற்ற பெண் பெனோ ஷெபைன் (25) வெற்றி பெற்றார். அவருக்கு இந்திய வெளியுறவுப் பணி (ஐஎப்எஸ்) ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதல்முறையாக ஐஎப்எஸ் பணிக்கு தேர்வுசெய்யப் பட்டுள்ள 100 சதவீதம் பார்வையற்ற பெண் இவர்.

சென்னை நுங்கம்பாக்கம் சிறுமலர் பார்வையற்றோர் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த பிறகு, ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் பி.ஏ. (ஆங்கில இலக்கியம்) பட்டமும், லயோலா கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்றவர் பெனோ.

இந்நிலையில், எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை தான் படித்த சிறுமலர் பார்வையற்றோர் பள்ளிக்குச் சென்று தனக்கு பாடம் சொல்லிக்கொடுத்த ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்பினார் பெனோ. சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சிறுமலர் பார்வையற்றோர் மேல்நிலைப் பள்ளிக்கு தந்தை லூக் ஆன்டனி சார்லஸ், தாய் மேரி பத்மஜாவுடன் நேற்று காலை 10 மணிக்கு சென்றார். அவரை பள்ளியின் தாளாளர் அருட்சகோதரி அமலா ரபேல், தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஏ.மார்கரெட், ஆசிரியர்கள், மாணவிகள் அன்புடன் வரவேற்றனர்.

தனக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை நன்றி யோடு நினைவுகூர்ந்த பெனோ, படிக்கும்போது நடந்த சுவையான நிகழ்வுகளை பகிர்ந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை இந்த பள்ளியில்தான் படித்தேன். நான் படித்த இடத்துக்கு வந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் இந்த அளவு உயர்ந்திருப்பதற்கு காரணம் இப்பள்ளி ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள்தான். எனக்கு பாடம் சொல்லித்தந்த ஆசிரியர்களை, குறிப்பாக அப்போதைய தலைமை ஆசிரியை அருட்சகோதரி ஜெம்மாவை நன்றியோடு நினைத்துப் பார்க்கிறேன். ஆசிரியர்கள் என் மீது வைத்த அதிகப்படியான நம்பிக்கைதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தியிருக்கிறது. படிப்புடன் இலக்கியம், பேச்சு என இதரப் போட்டிகளில் நான் பங்கேற்கவும் ஊக்கம் அளித்தனர்.

விரைவில் டெல்லியில் பயிற்சி

ஐஎப்எஸ் பணிக்கு இரண்டரை ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும். இதற்காக டெல்லியில் விரைவில் பயிற்சியில் சேர இருக் கிறேன். பயிற்சியை முடித்த பிறகு இந்தியாவில் அல்லது வெளிநாட்டில் பணி ஒதுக்குவார் கள். ஐஎப்எஸ் பணியை எனக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக கருதுகிறேன். இதில் சிறப்பாக பணியாற்றுவேன்.

இவ்வாறு பெனோ உருக்கத்துடன் கூறினார்.

அவர் 2006-ம் ஆண்டு எஸ்எஸ்எல்சி தேர்வில் 464 மதிப்பெண் பெற்று பார்வையற்றோர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். பிளஸ் 2 தேர்வில் 1,075 மதிப்பெண் எடுத்தார். ‘‘பெனோ நன்கு படிப்பார். சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். படிப்புடன் இதர போட்டிகளிலும் ஆர்வத்தோடு பங்கேற்பார்’’ என்று அவரது பிளஸ் 2 புவியியல் ஆசிரியை கிரேஸ், ஆங்கில ஆசிரியை மார்கரெட் தெரிவித்தனர்.



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

15 hours ago

மேலும்