குரூப்-2 தேர்வுக்கான விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? - ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்

By செய்திப்பிரிவு

குரூப்-2 தேர்வுக்கு விண்ணப் பித்தவர்கள் தங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய்துள்ளது.

துணை வணிகவரி அதிகாரி, சார்-பதிவாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி செயல் அதிகாரி (கிரேடு-2)உள்ளிட்ட பதவிகளில் 1,241 காலியிடங்களை நிரப்பு வதற்காக ஜூலை 26-ம் தேதி குரூப்-2 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் விண்ணப் பித்துள்ளனர்.

விண்ணப்பம் ஏற்கப்பட்டதா? இல்லையா? என்பதை ஆன் லைனில் தெரிந்துகொள்ள டிஎன்பிஎஸ்சி ஏற்பாடு செய் துள்ளது. அதன்படி, விண்ணப் பதாரர்கள் தங்கள் பதிவு எண்ணை டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவுசெய்து விண்ணப்ப நிலையை அறிந்துகொள்ளலாம்.

குரூப்-2 தேர்வுக்கு சரியான முறையில் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய கட்டணமும் செலுத்தியும் விண்ணப்பம் ஏற்கப் படாமல் இருந்தால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலான் நகலுடன் பெயர், பதிவு எண், கட்டணத்தொகை, கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலகம் அல்லது இந்தியன் வங்கி), வங்கிக்கிளை அல்லது அஞ்சலக அலுவலகத்தின் முகவரி ஆகிய விவரங்களுடன் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வெ.ஷோபனா கேட்டுக் கொண்டுள்ளார். விண்ணப்பங் கள் சரிபார்க்கப்பட்டு தகுதியான வர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்யும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

56 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்