தமிழகத்தின் தவிர்க்க முடியாத ஆளுமையாக திகழ்பவர் திமுக தலைவர் கருணாநிதி. அவரது நெடுந்தூர வாழ்க்கைப் பயணத்தின் காலம் ஒரு நூற்றாண்டை நெருங்கிக்கொண்டிருக்கிறது. | வீடியோ இணைப்பு கீழே |
எத்தனையோ பெரும் அரசியல் தலைவர்கள் பலரையும் கடந்து வந்தவர் அவர். ஆனாலும் இன்னும் அவரது குரல், அரசியல் வெளியில் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
முத்துவேலர் அஞ்சுகம் தம்பதியருக்குப் பிள்ளையாய் 1924-ல் பிறந்த கருணாநிதி இலக்கியம், அரசியல், நாடகம், திரை வசனம் என பல்துறை வித்தராய் வருபவர். இவரின் மேடைப் பேச்சுக்கும் சினிமா வசனங்களுக்காகவும் அன்றே தங்கள் இதயங்களைப் பறிகொடுத்தவர்கள் பலர் அவரை அடியொற்றி அரசியலிலும் பங்கேற்றவர்கனார்கள். பின்னர் அவர்களும் ஓய்ந்துபோய் இன்றும் அவரின் வரலாற்றுப் பக்கங்களை ஆர்வத்தோடு புரட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிருப்பவர்களாக இருக்கிறார்கள்.
'மந்திரிகுமாரி' திரைப்படத்தில் எம்ஜிஆரும் கருணாநிதியும் இணைந்து பணியாற்றத் தொடங்கியதும், 'பராசக்தி' திரைப்படத்தில் கருணாநிதி வசனத்தை சிவாஜி கணேசன் பேசி வெண்திரையில் அறிமுகமானதும் தற்செயல் என்று சொல்லமுடியாது.
காங்கிரஸ் பேரியக்கத்தை தோற்கடித்த அண்ணாதுரை ஒன்றரை ஆண்டு காலமே ஆண்ட அவரை காலம் அழைத்துக் கொண்டது. அதன்பிறகு அரியணையில் அமர்ந்தவர் கருணாநிதி. என்றாலும் 1971ல் பொதுத் தேர்தலில் முறையாக மக்கள் ஆதரவோடு பெரிய வெற்றியை அடைந்தார். இயக்கத்தின் கொள்கைகளைப் பின்பற்றி ஆட்சி செய்த கருணாநிதி வெற்றிவாகை சூடிய களிப்பில் மக்களையும் தலைவர்களையும் சந்திக்க வலம்வந்த காட்சிகள் இவை.
இன்றைக்கும் சமூக வலைதளங்களில் உச்சத்தில் இருக்கிறது கருணாநிதியின் பிறந்தநாள் டிரெண்டிங். இந்த வீடியோவுக்கு உற்சாகத்தைத் தரும் பின்னணி பாடலில் உள்ள ''வாவா தலைவா வணக்கம் வணக்கம் நீ வந்தால் எங்கள் வாழ்வு மணக்கும்'' என்ற
மறைந்த கவிஞர் வாலியின் வசீகர வரிகள் அன்றைய கருணாநிதிக்கு எவ்வளவு அழகாகப் பொருந்துகிறது... பதவியில் இல்லையென்றாலும் முரசொலி வாயிலாக மட்டுமின்றி முகநூல் வழியாகவும் புகழின் பாதையில் நடைபோட்டு பொறுப்போடு செயலாற்றும் இன்றைய கருணாநிதிக்கும் எவ்வளவு சரியாய் பொருந்துகிறது....
அரிய வரலாற்றுக் காட்சிகள் அடங்கிய அந்தக் கருப்பு வெள்ளை - வீடியோவை நீங்களும் பாருங்கள்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
26 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago