யு.எஸ். பெண்ணுக்கு இரண்டு கால்களிலும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை: சென்னை மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனை டாக்டர் சாதனை

அமெரிக்க பெண்ணுக்கு இரண்டு முழங்காலிலும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சென்னை மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனை டாக்டர் ஏ.கே.வெங் கடாசலம் சாதனை படைத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள ஆர்கன் சாவை சேர்ந்தவர் ரெனிகோரல் (56). ஆசிரியையான இவர் இரண்டு கால்களிலும் முழங்கால் மூட்டு தேய்மானத்தால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவச் சுற்றுலாவாக இந்தியா வந்த ரெனிகோரல், சிகிச்சைக்காக மயிலாப்பூரில் உள்ள சென்னை மீனாட்சி பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து, ரெனிகோர லுக்கு இரண்டு கால்களின் முழங் காலிலும் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்தனர். எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ஏ.கே.வெங்கடாசலம் தலைமையிலான குழுவினர் ரெனிகோரலுக்கு இரண்டு முழங்கால்களிலும் தனித்தனியாக அறுவை சிகிச்சை செய்து செயற்கை மூட்டுகளை பொருத்தினர். இந்த சிகிச்சைக்கு பிறகு, ரெனிகோரல் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நன்றாக நடக்கவும் செய்கிறார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக, டாக்டர் ஏ.கே.வெங்கடாசலம் கூறுகையில், ‘‘முழங்கால்களில் செயற்கை மூட்டு மாற்று அறுவை சிகிச்சைக்கு பிறகு, ரெனிகோரல் நன்றாக நடக் கிறார். ரூ.2.80 லட்சம் மதிப்புள்ள இரண்டு செயற்கை மூட்டுகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்தோம். இன்னும் 30 ஆண்டு களுக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லாமல் ரெனிகோரல் நன்றாக நடக்க முடியும்’’ என்றார்.

ரெனிகோரல் கூறுகையில், “அறுவை சிகிச்சைக்கு பிறகு, நன்றாக நடக்கிறேன். எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னை மீண்டும் நடக்க வைத்த டாக்டருக்கு நன்றி தெரிவிக்கிறேன்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்