மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்

By செய்திப்பிரிவு

மருத்துவக் கல்லூரிகளில் 2015-16 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க் கைக்கான மருத்துவ விண்ணப்ப விநியோகம் கடந்த மே மாதம் 11-ம் தேதி சென்னை கீழ்ப்பாக்கம் மருத்து வக் கல்லூரியில் தொடங்கியது. இதற்காக மொத்தம் 40 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டன. அவற்றில் 35 ஆயிரத்து 667 விண் ணப்பங்கள் விற்பனையாகின. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மே 29-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கப் பட்டன.

இதைத் தொடர்ந்து பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் ரேண்டம் எண் தயாரிக் கப்பட்டு கடந்த 11-ம் தேதி பட்டியல் வெளியிடப்பட்டது.

இதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.

சிறப்பு பிரிவுக்கு..

இந்நிலையில் மாற்றுத்திறனாளி கள், ராணுவத்தினர் மற்றும் விளை யாட்டு ஆகிய சிறப்பு பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையில் நடைபெறுகிறது. 20-ம் தேதி (நாளை) முதல் 25-ம் தேதி வரை பொது பிரிவுக்கான முதற்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

ஏற்பாடுகள்

கலந்தாய்வு நடைபெறும் பன்னோக்கு மருத்துவமனையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர் களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்