பிரச்சாரம் செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் தடுக்கின்றனர்: சி.மகேந்திரன் குற்றச்சாட்டு

ஆர்.கே.நகர் தொகுதியில் பிரச்சாரம் செய்ய விடாமல் ஆளுங்கட்சியினர் தடுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சி.மகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையின் அனுமதி பெற்றுதான் பிரச்சாரம் செய்கிறோம். ஆனாலும் எங்கள் பிரச்சாரத்தை ஆளுங்கட்சியினர் தடுத்து வருகிறார்கள்.

எங்கு சென்றாலும் ஆளுங்கட்சியினர் எங்களைச் சுற்றி ஊர்வலங்கள் நடத்தி குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள். இதனைத் தடுக்காமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது.

எங்களின் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்துவதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் எந்தப் பலனும் இல்லை. இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் அவர்களின் உதவியாளர்கள் தொகுதியில் குவிந்துள்ளனர். இவர்களின் விலை உயர்ந்த கார்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆளுங்கட்சியின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்த விண்வெளி செயற்கோள் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்க வேண்டும். ஆர்.கே.நகரில் தெருக்களை அடைத்துக் கொண்டு நிற்கும் கார்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும்'' என சி.மகேந்திரன் கூறியுள்ளார்.





VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

தமிழகம்

25 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்