சாராயக்கடையை நொறுக்கியதாக 4 பெண்கள் உட்பட 6 பேர் மீது வழக்கு

புதுச்சேரியில் சாராயக்கடையை அடித்து நொறுக்கிய சம்பவம் தொடர்பாக 4 பெண்கள் உட்பட 6 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

புதுச்சேரியில் வழுதாவூர் சாலை கவுண்டன்பாளையம் பகுதியில் உள்ள சாராயக் கடையை அகற்றுமாறு பொது மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால், நடவடிக்கை எடுக்காத தால் நேற்று முன்தினம் அந்தக் கடையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பெண்கள், திடீரென கடைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். கடையில் இருந்த சாராய பாட்டில்கள், கேன்களை அடித்து நொறுக்கினர். சாரா யத்தை சாலையில் ஊற்றி அழித்தனர்.

இது தொடர்பான புகாரின் பேரில் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகக் குழு உறுப்பினர் சேது செல்வம், கருணாகரன், இந்திய மாதர் தேசிய சம்மேளனம் தட்டாஞ் சாவடி தொகுதி தலைவர் சுமதி, மாநில செயலாளர் ஹேமலதா, கவுரி, சாந்தி ஆகிய 6 பேர் மீது கோரிமேடு சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

அவர்கள் மீது சட்டவிரோதமாக கூடுதல், ஆபாசமாக திட்டுதல், அத்துமீறி கடையில் புகுந்து பொருட்களை சூறையாடுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்