இளைஞர்களுக்கு இலவச ஆங்கிலப் பயிற்சி: ரின் வழங்குகிறது

இளைஞர்களுக்கான இலவச ஆங்கிலப் பயிற்சியை ரின் வழங்கு கிறது. இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தயாரிப்பான ரின் ஆரம்பித்துள்ள ‘ரின் காரியர் ரெடி அகாடெமி’ மூலம் இந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. இந்தப் பயிற்சியில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜூன் 15-ம் தேதி முதல் 1800-121-4545 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுக்க வேண்டும்.

‘ரின் காரியர் ரெடி’ அகாடெமியின் பயிற்சிகள் குறித்து இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் துணிகள் பிரிவு தலைவர் விபுல் மாத்தூர் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது:

ஆங்கிலம் தெரியாதவர்களை விட ஆங்கிலம் தெரிந்தவர்கள் 34 சதவீதம் அதிகம் சம்பாதிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே, இளைஞர்களின் வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் பயிற்சிகளை ‘ரின் காரியர் அகாடெமி’ வழங்கவுள்ளது. ஆங்கிலத்தில் பேசும் திறன், அலுவலகத்துக்கு ஏற்ற ஆடை அணிவது, நேர்காணலுக்கான பயிற்சி ஆகிய மூன்று அம்சங்கள் இதில் கற்றுத்தரப்படும்.

மூன்று மாத காலப் பயிற்சியில் அலைபேசி மூலமாக நூறு பாடங் கள் கற்கலாம். சாதாரண அலை பேசி வைத்திருப்பவர்களும் இதில் பங் கேற்கலாம். இந்த பயிற்சியில் சிறந்து விளங்கும் மாணவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு பிரிட் டிஷ் கவுன்சில் மூலமாக மூன்று வாரங்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்படும். இதில் பங்கேற்பவர் களின் அனைத்து செலவுகளையும் ரின் ஏற்றுக்கொள்ளும். வரும் 15-ம் தேதி முதல் 1800-121-4545 என்ற எண்ணுக்கு மிஸ்ட் கால் கொடுத்து பதிவு செய்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது திரைப்பட நடிகர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ரிஷி பேசும்போது, “ஆங்கிலம் என்பது இன்றைய சூழலில் அடிப்படை தேவையாக மாறிவிட்டது. டாக்டர் பட்டம் பெற்றிருந்தாலும் முறையாக ஆங்கிலம் பேசத் தெரிந்திருந்தால்தான் வாழ்க் கையில் முன்னேற முடியும். அதேநேரம் தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மொழிக்கு மற்றொரு மொழி மாற்றாக இருக்க முடியாது”என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்