கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகள் உற்சாகம்

By எஸ்.கே.ரமேஷ்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து இன்று திறக்கப்பட்ட பள்ளிகளுக்கு மாணவ, மாணவிகள் உற்சாகமாகச் சென்றனர்.

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. ஒரு மாதம் கோடை விடுமுறை முடிந்து மாணவ, மாணவிகள் உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் பள்ளிகளுக்குச் சென்றனர்.

பல பள்ளிகளில் மாணவ, மாணவிகளை வரவேற்கும் வகையில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை நேரத்தில் ஒரு மாதமாக காலியாக சென்ற அரசு, தனியார் பஸ்களில் இன்று மாணவ, மாணவிகள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

காலை நேரத்தில் கிராம புறங்களில் இருந்து பள்ளிக்கு செல்ல கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், மாணவ- மாணவிகளுக்கு பள்ளிக்கூடம் திறக்கும் இன்றே எந்தவித தடையும் இன்றி புத்தகம், நோட்டு மற்றும் சீருடை வழங்கிட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அதன்படி இன்று மகிழ்ச்சியுடன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கு சென்ற மாணவ, -மாணவிகள் அனைவருக்கும் விலையில்லா புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி கூறும் போது, 269 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம், சீருடைகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்