நாமக்கல்லில் 3 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு: குழந்தைகள் அலகில் ஒப்படைப்பு

By செய்திப்பிரிவு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள லாரி பட்டறை மற்றும் அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் ஆலையில் பணிபுரிந்த மூன்று குழந்தை தொழிலாளர்களை, தொழிலாளர் துறை அதிகாரிகள் மீட்டனர்.

நாமக்கல் மாவட்டத்தில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என்பது குறித்து ஆய்வு நடத்தும்படி தொழிலாளர் துறையினருக்கு மாவட்ட ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி உத்தரவிட்டார்.

அதன்படி மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மஞ்சள்நாதன் தலைமை யில் தொழிலாளர் துறையினர், தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட ஒருங்கிணைப்பாளர் அ. போ.அந்தோணி ஜெனிட் உள்ளிட்டோர் நாமக்கல் துறையூர் சாலை அண்ணாநகர், பரமத்தி வேலூர் பொத்தனூர் பகுதியில் உள்ள லாரி பட்டறை, அலுமினிய பாத்திரம் தயாரிப்பு ஆலைகளில் ஆய்வு நடத்தப் பட்டது. மொத்தம் 50 நிறுவனங் களில் ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வின் போது லாரி பெயின்டிங் பட்டறையில் வேலை செய்த 14 வயதிற்கு குறைந்த விக்ரமன், அலுமினிய பாத்திரம் தயாரிக்கும் தொழிற் சாலையில் பணிபுரிந்த மூர்த்தி, மற்றொரு மூர்த்தி என மொத்தம் மூன்று குழந்தை தொழிலாளர் களை அதிகாரிகள் மீட்டனர். மூவரும்நாமக்கல் ஆட்சியர் வ.தட்சிணாமூர்த்தி முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அமைப்பில் ஒப்படைத்து, அவர்கள் கல்வி பயில நடவடிக்கை எடுக்கும்படி ஆட்சியர் தட்சிணா மூர்த்தி உத்தரவிட்டார்.

தொழிலாளர் உதவி ஆய்வாளர் சீனிவாசன், ஆள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் த.தமிழ்ச்செல்வி ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்